116

மணிதிகழ் விறன்மலை வெம்ப (1) மண்பகத்
துணிகயந் துகள்பட்ட தூங்கழல் வெஞ்சுரம்

எ - து: பல உணவுகளையும் விளைந்து கொடுத்து எல்லாரையும் நுகர்விக்கும் பயனையுடைய நிலம் ஈரம் அறும்படி ஞாயிறு குற்றத்தைச்செய்யுஞ் சினத்தோடே தன்னிடத்தினின்றுஞ் செல்கின்ற கதிர்களைச் 1சொரிகையினாலே மாறுதலில்லாத வெய்ய கோடைக்காலத்திற்கு அதனிடத்துள்ள குளிர்ச்சியை விரும்பித் திரட்சிகொள்ளும் பசிப்பிணியாற் சுடுதலையுடைய வருத்தத்தினையுடையவாகிய பெரிய களிற்றினுடைய திரளைத் தாங்கும் மணிகள் விளங்கும் வெற்றியையுடைய மலை வெம்ப மண்பிளக்கத் தெளிந்த நீர்நிலைகளும் துகளுண்டான செறிந்த அழலையுடைய வெய்ய காடு; எ - று.

தாங்கும் விளங்கும் மலை; அணிகொள்ளுங் களிற்றினம்.

அயத்தணி கொள்ளுமென்று பாடமாயின், நீர்நிலைகளிலே திரட்சி கொள்ளுமென்க.

இது தரவு.

7 (2)கிளிபுரை கிளவியாய் நின்னடிக் கெளியவோ
தளியுறு பறியாவே காடெனக் கூறுவீர்
வளியினும் வரைநில்லா வாழுநா ணும்மாகத்
(3) தளியென வுடையேன்யா னவலங்கொண் டழிவலோ

எ - து: ‘கிளியினது மொழியை யொக்கும் மொழியினை யுடையாய்! தூங்கழல் வெஞ்சுரம் 2மழைபெய்தலைக் கண்டறியாவாதலால் அக்காடு நின் அடிக்குப் போதற்கு 3எளியவாயிருக்குமோ’ என்று கூறுகின்றவரே! யான், நும்முடைய ஆகத்திடத்து முயக்கத்தைக் கண்டார் காற்றினுங்காட்டில் ஓர் எல்லையில் அகப்பட்டு நில்லாதவளுடைய வாழ்நாளென்று கூறும்படியாக அதனை (?) வாழ்நாளாக உடையேனாதலால் அவலத்தைக் கொண்டு நெஞ்சழிவேனோ? இறந்துபடுவேனே ; எ - று.

11 (4)ஊறுநீ ரமிழ்தேய்க்கு மெயிற்றாய்நீ யுணல்வேட்பி
னாறுநீ ரிலவென வறனோக்கிக் கூறுவீர்

1. (அ) "புலம்பு வீற்றிருந்த நிலம்பகு வெஞ்சுரம்" அகம். 335: 8. (ஆ) "வான, நிலம்பக வறந்த புலம்புறு சேணிடை" தமிழ்நெறி. மேற்கோள். (இ) "நிலம்பக வெம்பிய நீள்சுரம்" வளையாபதி.

2. "கிளிபுரை கிளவியாய்" கலி. 13: 18.

3. "அளியென..............................டழிவலோ" என்பது மேற்கதுவாய் மோனைக்கு மேற்கோள். தொல். செய். சூ. 92. நச்.

4. (அ) ஏய்க்கும் என்பது அருகிப் பயவுவமையில் வந்ததற்கு "ஊறுநீ ரமிழ்தேய்க்கு மெயிற்றாய்" என்பது மேற்கோள். தொல். உவம. சூ. 14. பே. (ஆ) "எயிற்றமிழ் தூறுந்தீநீர்" கலி. 4: 13.

(பிரதிபேதம்) 1 சொரிகையினாலே மலைவெம்ப, 2 மழையைத்தலைக், 3 போக்கெளிய.