114

7 செல்லினிச் சென்றுநீ செய்யும் வினைமுற்றி
(1) யன்பற மாறியா முள்ளத் துறந்தவள்
பண்பு மறிதிரோ வென்று வருவாரை
யென்றிறம் யாதும் வினவல் லினவிற்
பகலின் விளங்குநின் செம்மல் சிதையத்
தவலருஞ் செய்வினை 1முற்றாம லாண்டோ
ரவலம் படுதலு முண்டு

எ - து: இனி, நீ நினைத்த காரியத்தே போய் ஆண்டுச் செய்யுங் காரியத்தை முடித்தபின்னர் இவ்விடத்து 2நின்று வருவாரை எம்மை நினைத்து வருந்தும்படியாக அன்பு நீங்கும்படி மனம் வேறுபட்டு யாந் துறக்கப் பட்டவளுடைய செய்தியும் அறிவீரோவென்று என் றிறத்துச் சிறிதும் வினவாதேகொள். வினவுவையாயின் அவர் இறந்துபாடு கூறவுங் கூடும். அது கேட்டால் (2) ஞாயிறுபோல விளங்குகின்ற நின் தலைமை கெடும்படி யாகக் கெடுதற்கரிய நீ செய்யுங் காரியம் முடியாமல் அவ்விடத்தே ஓர் அவலம் பிறத்தலும் உண்டு; 3எ - று.

"வருத்த மிகுதி சுட்டுங் காலையு, முரித்தென மொழிப வாழ்க்கையு ளிரக்கம்" (3) என்பதற்கு உய்த்துக்கொண்டுணர்தலென்னுந் தந்திரவுத்தியால் ஏனைப் பிரிவான் நிகழும் வருத்த மிகுதியைக் குறித்த இடத்தும் உயிர் வாழ்க்கையுள் இரக்கம் உரித்தென்றதனான் உயிர்வாழ்க்கையுள் இரக்கங் கூறினாள்.

உம்மை, ஐயம்.

இதனால், தோழிக்கு அச்சமும் தலைவற்கு அசைவும் பிறந்தன.

கொச்சகம் 4வெண்பாவாய் வருதலானுந் தாழிசையோடு தொடராது வருதலானும் இவை தரவினைக் கொச்சகம். இரண்டும் ஒருபொருணுதலி இவ்வாறு வரினுங் கொச்சகமேயாம். இது "பாநிலை வகையே" என்னும்(4) சூத்திரவிதியாம். (12)


1. (அ) "அன்பறமாறியா............படுதலுமுண்டு" என்பது வருத்த மிகுதியைக் குறித்தவழி மனைவாழ்க்கையுள் இரக்க முரித்து என்பதற்கு மேற்கோள். தொல். பொருளி. சூ.30. ‘வருத்தமிகுதி’ இளம்; சூ. 32. நச். (ஆ) "இனவா ரணந்திரி வெஞ்சுரம் போகவிரும் பொருட்கு, நினைவாகி லும்மை விலக்கு கிலேஞ்செல்லு நீள்புனத்து, மனவா ரகலல்குல் வல்லியை நீர்வரு வார்சிலரை, வினவா தொழியும் வினவின் முற்றாது வினையுமக்கே" அம்பிகா. 543.

2. "மாகதேச, னெந்நரபதிகளுக்கு மிரவியே யென்னவந்தான்"

3. தொல். பொருளி, சூ, 32.

4. தொல். செய் சூ. 155.

(பிரதிபேதம்) 1 முற்றாமை, 2 நின்றும், 3 எனச்செலவழுங்குவித்தாள், 4 வெண்பாவாயும்.