111

தலால் தாளாண்பக்கம்; 'சென்றோர் முகப்பப் பொருளுங் கிடவாது' என்றது (1) தத்தம் நிலைமைக்கு ஏற்பப் பொருள் தேடவேண்டுதலி னதுபாணிக்கு மென்றலின், தகுதியதமைதி. 'ஒரோஒகை தம்முட் டழிஇ யொரோஒகை, யொன்றன்கூறாடை யுடுப்பவரே யாயினும்' என்றது இன்மையதிழிவு; ' இளமையுங் காமமு மோராங்குப் பெறறார், வளமை விழைதக்க துண்டோ' என்றது உடைமைய துயர்ச்சி; ' பிரிந்துறை சூழாதி யைய' என்றது அன்பின தகலம், பிரிதுறைந்து அன்பு பெருக்கவேண்டா, 'ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை' என்றலின்; 'தொய்யிலும் யாழ நின் மைந்துடை மார்பிற் சுணங்கு நினைத்துக்காண்' என்பது அகற்சியதருமை.

இதனால், தோழிக்கு நலிதலும் தலைவற்குக் கருதுதலும் பிறந்தன.

இது (2) பன்னீரடியான் வந்து ஒரு பொருணுதலிய கட்டளைக் கலி வெண்பா. இது பெண்டன்மைக்கேலா நுண்பொருளினைத் தலைவனெதிர் நின்று உணர்த்துவாள் செவ்வன் கூறாது, தலைவன்பண்டு கூறியன சிலவற்றை வாங்கிக்கொண்டு கூறுங் கூற்று, நீ மறந்தாயென்பது யாம், உணரக்கூறுகின்றாள் இவளென்பது படநின்றமையின் ஒருபொரு ணுதலிற்றாயிற்று.


1. "தத்த நிலைக்குங் குடிமைக்குந் தப்பாமே, யொத்த கடப்பாட்டிற் றாளூன்றி-யெய்த்து, மறங்கடையிற் செல்லார் பிறன்பொருளும் வெஃகார், புறங்கடைய தாகும் பொருள்" நீதிநெறி. 65.

2. (அ) "அரும்பொருள்.........தரற்கு" என்பது பன்னிரண்டடியான் வந்து பல பொருணுதலி யமைதலிற் கலிவெண்பாட்டாயிற்று. ஒரு பொருள் நுதலிய வெனவே சொல்லப்படும் பொருளின் வேறாகிக் கருதியுணரப்படும் பொருளுடைய தென்பதூஉம் பெற்றாம். என்னை? இப்பாட்டினுட் பெண்டன்மைக் கேலாத நுண்பொருளினைத் தலைமகனெதிர்நின்று உணர்த்துவாள் செவ்வனஞ் சொல்லாது தலைமகன் பண்டு கூறியன சிலவற்றை வாங்கிக்கொண்டு சொல்லி அவன் மறைத்தா னென்பது உணர்த்துகின்ற பொருண்மை கருதி உணர வைத்தமையின் அவ்வாறாயிற்று. ஒழிந்த பாக்களும் அவ்வாறு ஒரு பொருணுதலுமாயினும் அங்ஙனம் நுதலிய பொருள் பற்றிச் செய்யுள் வேறுபடாமையின் ஆண்டாராய்ச்சி யின்றென்பது; வெண்பாவிற் குறித்த பொருளினை மறைத்துச் சொல்லாது செப்பிக் கூறல்வேண்டுமாகலானும் இஃது அன்னதன்றி ஒரு பொருணுதலித் துள்ளினமை யானுங் கலிவெண்பாட்டெனப் பட்டதென்பது, என்பது பேராசிரியர். (தொல்.செய். சூ. 153); (ஆ) நச்சினார்க்கினியர். "அரும்பொருள்............தரற்கு" என்பது பன்னீரடியான் வந்து ஒரு பொருணுதலிய கட்டளைக் கலிவெண்பா. இதனுட் பெண்டன்மைக்குஏலா நுண் பொருளினைத் தலைவனெதிர்நின் றுணர்த்துவாள் செவ்வன் கூறாது தலைவன் பண்டு கூறின சிலவற்றை வாங்கிக் கொண்டு கூறுங்கூற்று. நீ மறந்தாயென்பது யாம் உணரக் கூறுகின்றாள்