இதன் பொருள். ஐய! அரிய பொருளிடத்துச் செல்கின்ற ஆசையினால் உள்ளம் உஞற்று கையினாலே பிரிந்துபோயிருத்தலை நினையாதேகொள், நீ விரும்பித் தலைவி தோளில் எழுதிய தொய்யில் தருகின்ற அழகினையும் இவள் மார்பில் நின்னை வலியாகவுடைய சுணங்கின் அழகையும் கைவிடல் ஒல்லுமாயின் நினைத்துப் பார்; நீ நன்கு மதித்த பொருளும், சென்றவர்கள் தத்தம் நிலைமைக்கேற்பக் காலம் நீட்டிப்ப நின்று தேடுவதன்றி இப்பொழுதே முகந்துகொள்ள ஓரிடத்தே கிடவாது; பொருள் தேடப் போகாதிருந்தவர்க ளெல்லாரும் ஒருவாற்றான் உண்ணாமையும் ஒழுகார்; இளமையையும் இருதலையுமொத்த காமத்தையுஞ் சேரப்பெற்றவர்கள் செல்வத்தை விரும்பத்தக்கதொரு நன்மை அச்செல்வத்திற்கில்லை; இல்வாழ்க்கையாவது தமக்குக்கற்பித்தநாளெல்லாம் உள்ளில் ஒரொவொரு 1கையாலே தம்முள்ளே தழுவிக்கொண்டு புறத்தில் ஒரோவொரு 2கையாலே ஒன்றன் 3கூறாகிய ஆடையை உடுத்திருப்பவரேயாயினும் பிரியாதிருப்பவர்களுடைய வாழ்க்கையே [வாழ்க்கை], கழிந்த இளமை மீண்டு தருதற்கு 4அரிது; எ-று. பிரிந்திறை சூழாதியை என்று பாடமாயின் பிரிந்து போவதனால் இவள் இறந்துபடுஞ் செய்கையை நினையாதே கொள்ளென்க. "தாயத்தி னடையா வீயச் செல்லா, வினைவயிற் றங்கா வீற்றுக் கொளப்படா, வெம்மென வரூஉங் கிழமைத் தோற்ற, 5மல்ல வாயினும் புல்லுவ வுளவே." (1) இதனால், தோழி தலைவிதோளை என்றோளென்றாள். மென்றோளும் பாடம். இவன் முயக்கத்தால் சுணங்கு பரத்தலின் நின்னை வலியாக உடைய சுணங்கென்றாள். பொருளுமென்ற உம்மை சிறப்பு; உண்ணாது மென்னும் உம்மை ஐயம்; உண்டோவென்னும் ஓகாரம் எதிர்மறை;யாழவும் அரோவும் அசை. (2) இதனுள், 'உளநாள்' என்றது நாளதுசின்மை; சென்ற இளமைதரற்கு அரிதென்றது இளமையதருமை; 'உள்ளந்துரப்ப' என்றது உள்ளம் உஞற்று
1. தொல். பொருளி. சூ, 27. இச்சூத்திரத்து இளம்பூரணருரையில் எம்மென வரூஉங் கிழமைத் தோற்றத்திற்கு, மேற்கோளாக "விரும்பிநீ, யென்றோ ளெழுதிய.............நினைத்துக் காண்" என்ற பகுதியும் அதற்கு 'இதனுள், தலைமகள்தோளைத் தோழி தன்னையு முளப்படுத்தி எனதெனக் கூறியவாறு காண்க' என்னும். குறிப்பும் உள்ளன. (தொல். பொருளி. சூ, 25.'தாயத்தின்'); சூ. 27. நச். 2. தலைவன்கண் நிகழ்ந்த கூற்றினைத் தலைவியுந் தோழியும் கூறி நிற்றலும் பாலைத் திணையாம் என்பதற்கு இச்செய்யுளை மேற்கோள் காட்டி இதிற் சிறிது வேறுபட விசேடவுரையு மெழுதினர் நச்சினார்க்கினியர். தொல். அகத். சூ. 44. (பிரதிபேதம்) 1 கைகளாலே, 2 கைகளாலே, 3 கூற்றாகிய, 4 அரிதெனமுடிக்க. " தாயத்தினடையா.....வே, 5 அல்லா.
|