112

"மரையா மரல்கவா" (1) என்பதனுட் கூறிய உரையில் வேண்டுவன இதற்குங் கூறிக்கொள்க. (17)

19 (1)செவ்விய தீவிய சொல்லி யவற்றொடு
பைய முயங்கிய வஞ்ஞான் றவையெல்லாம்
பொய்யாதல் யான்யாங் கறிகோமற் றைய
வகனகர் கொள்ளா வலர்தலைத்தந்து
பகன்முனி வெஞ்சுர முள்ள லறிந்தேன்
மகனல்லை மன்ற வினி;
செல்லினிச்சென்றுநீ செய்யும் வினைமுற்றி
யன்பற மாறியா முள்ளத் துறந்தவள்
பண்பு மறிதிரோ வென்று வருவாரை
யென்றிறம் யாதும் வினவல் வினவிற்
பகலின் விளங்குநின் செம்மல் சிதையத்
தவலருஞ் செய்வினை முற்றாம லாண்டோ
ரவலம் படுதலு முண்டு.

இது பிரிவுணர்த்தப்பட்ட தோழி செலவு விலக்கவும் பிரிவின் மேற் சென்ற உள்ளத்தனாயினானை நீ பிரியின் இவள் இறந்துபடுமெனச் சொல்லிய வாய்பாட்டான் மறுத்தது.


இவளென்பது படநின்றமையின் ஒரு பொருணுதலிற்றாயிற்று. அது அகப்பொருளே யாமாறும் ஒழிந்தபாக்களும் அவ்வாறு வருமேனும் அங்ஙனம் நுதலிய பொருளா[ன](ற்) செய்யுள் வேறுபடாமையின் ஆண்டு ஆராய்ச்சியின்று; இது வெண்பாவா[யி](தலி))ற் குறித்த பொருளை மறைத் துக்கூறாது செப்பிக்கூறல் வேண்டும். இஃதன்ன தன்றிப் பொருள் வேறு படுதலானுந் துள்ளி வருதலானுங் கலி வெண்பாட்டாயிற்று." என்பர். தொல்.செய்.சூ. 153.

1. கலி. 6, பக்கம். 44. பார்க்க.

2. இச்செய்யுள் (அ) தலைமகன் பிரிவுணர்ந்த தலைமகள் அவனுடன் கூறியதற்கும், (தொல், அகத், சூ. 45'எஞ்சியோர்' இளம்) (ஆ) தாழிசையின்றித் தரவு முதலாயின வந்ததற்கும் (இவர் " செவ்விய திவ்விய.........வினிது" என்பது தரவென்றும், "செல்லினிச்...........முண்டு" என்பது சுரிதக மென்றும் தாழிசையும் தனிச்சொல்லும் இல்லை யென்றும் கூறுவர்) (தொல். செய். சூ. 142. 'தரவின்றாகித்' இளம்) (இ) தரவிணைக் கொச்சகத்திற்கும் (தரவிணை அடுக்குதலிற் தரவிணைக் கொச்சக மெனப்படும்) (தொல். செய். சூ. 155. பே நச்) மேற்கோள்.