109

1யென்றோ ளெழுதிய தொய்யிலும் யாழ (2) நின்
மைந்துடை மார்பிற் சுணங்கு நினைத்துக்காண்
5சென்றோர் முகப்பப் பொருளுங் கிடவா
தொழிந்தவ ரெல்லாரு முண்ணாதுஞ் செல்லா
(3) ரிளமையுங் காமமு மோராங்குப் பெற்றார்
(4) வளமை விழைதக்க துண்டோ வுளநா
1ளொரோஒகை தம்முட் டழீஇ 2யொரோஒகை
10 (5) யொன்றன்கூ றாடை யுடுப்பவரே யாயினு
(6) மொன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை யரிதரோ
சென்ற விளமை தரற்கு.

இஃது "ஒன்றாத்தமரினும்" என்னும் (7) சூத்திரத்தில் "நாளதுசின்மையு மிளமைய தருமையுந், தாளாண் பக்கமுந் தகுதியதமைதியு, மின்மையதிழிவு முடைமைய துயர்ச்சியு, மன்பின தகலமு மகற்சிய தருமையும்" எனக்கூறிய எட்டினையும் தலைவன் கூறக்கேட்ட தோழி, அவற்றை "நிகழ்ந்தது கூறி நிலையலுந் திணையே" என்னும் (8) விதியாற் றலைவற்குக் கூறிச் செலவழுங்குவித்தது.


1. "என்றோ ளெழுதிய.................நினைத்துக்காண்" என்பது யாண்டினது ஒப்புக்கு மேற்கோள். தொல். மெய்ப்பாடு. சூ. 25. பே.

2. "நின் மைந்துடை மார்பிற் சுணங்கு" என்பது (ஆறாம்) வேற்றுமைத் தொகைக்கு மேற்கோளாக வுள்ளது? தொல். எச்ச. சூ, 17. நச்.

3. "இறந்துசெய் பொருளு மின்பந் தருமெனி, னிளமையிற் சிறந்த வளமையுமில்லை, யிளமை கழிந்த பின்றை வளமை, காமந்தருதலு மின்றே" நற். 126 : 7 - 10 "இளமையுங் காமமும் யாங்கொளித்தனவோ" மணி. 22 : 131.

4. " பொருள் செய்ய, மருங்கிற்பாதி தருந்துகில் புனைந்தும், விளைவய லொடுங்கு முதிர்நெல் லுணவினுந், தம்மில் வீழுநார்க் கின்பமென் றறிந்தும்..........செல்லுதிபெரும" கல். 24. என்பதும். கலி. 15 : 24 - 6 -ஆம் அடிகளும்; இங்கே ஒப்புநோக்கற்பாலன.

5. "வண்ணத் துகிலுடுப்பின் வாய்விட் டழுவதுபோல் வருந்து மல்கு, னண்ணாச் சிறுகூறை பாகமோர் கைபாக முடுத்து" " மாசித் திங்கண் மாசின சின்னத் துணிமுள்ளி, னூசித்தூன்ன மூசியவாடை யுடையாக" சீவக. 2625 :2929.

6 "இனிதுடன் கழிக்கி லிளமை, யினிதாலம்ம" ஐங். 415.

7. தொல். ,அகத், 41.

8. தொல.் அகத். சூ, 44.

(பிரதிபேதம்) 1, 2 ஓரோகை.