| 1நாளின்: இன, அசை;ஓகாரம் எதர்மறை. | 9 | ஆற்றனோ யடவிவ ளணிவாட வகன்றுநீ தோற்றஞ்சா றொகுபொருண் முயறிமன் 2முயல்வளவை நாற்றஞ்சா னளிபொய்கை யடைமுதிர் முகையிற்குக் 3கூற்றூழ்போற் குறைபடூஉம் வாழ்நாளு நிலையுமோ |
எ - து: இவள் வலியையுடைய காமநோய் அடுகையினாலே அழகு கெடும்படி நீ பிரிந்து பகைவர் தந்த நாட்டைக் காத்துப் பெறும் விளக்கம் அமைந்த திரளும் பொருள்களைத் தேடுதற்கு மிகவும் முயல்வை; அங்ஙனம் முயலுமளவில் நாற்றம் அமைந்த பெருமையையுடைய பொய்கை இலையைவிட்டு முற்றின தாமரைமுகைக்குக் (1) கூற்றமாகிய (2) அலர்ச்சி அதன் குறைவிற்குக் காரணமாயினாற்போல இத்துணைக்காலம் இருவென விதித்த காலங் குறைபட்டு வருவதற்குக் காரணமான வாழுகின்ற நாள்களும் இவளுடன் நிலைபெறுமோ; எ-று. தொகுபொருளாவன, (3) அறமும் பொருளும் இன்பமுமாம். 13 | வகையெழில் வனப்பெஞ்ச வரைபோக வலித்துநீ பகையறு பயவினை முயறிமன் 4முயல்வளவைத் தகை (4) வண்டு புதிதுண்ணத் தாதவிழ் தண்போதின் முகைவாய்த்த தடம்போலு மிளமையு நிலையுமோ |
எ - து: இவள் கூறபாட்டையுடைய உறுப்பழகுந் தோற்றும்பொலிவுங் கெடும்படி மலையைப்போக நீ துணிந்து பகையறுதற்குக் காரணமான நாடாகிய பயனைத்தருங் காவற்பிரிவை மிகவும் முயல்வை; அங்ஙனம் முயலுமளவில் அழகையுடைய வண்டுகள் தன் புதுமையை நுகரும்படியாகத் தாதை அலர்ந்த குளிர்ந்தபூ இனிய முகையென்கின்றவை வாய்த்தற்குக்
1. "வாழைக்குத் தானீன்ற காய்கூற்றம்" மூதுரை. 2. ஊழ்த்தல் அலர்தலென்னும் பொருளிள் வருதலை (அ) "நனையூழ்த்த செருந்தியும்" (ஆ) "இணரூழ்த்த மரத்தொடும்" (இ) "அரும்பூழ்த்து மரமெல்லா மலர்வேய" (ஈ) "இணரூழ் கொண்ட..............வேங்கை" (உ) "இணரூழ்த்த கமழ்தோட்டமலர்" கலி 26, 32, 33, 44, 67. (ஊ) "காயாவு நுண்ணரும் பூழ்த்த புறவு" கார். 8. (எ) "இணைரூழ்த்து நாறா மலரனையர்" குறள். 650. என்பவையும் வலியுறுத்தும். இங்கு ஊழென முதனிலைத் தொழிற் பெயராய் நின்றது. 3. "அறனும் பொருளு மின்பமு மூன்றும்" புறம். 28. 4. (அ) "பல்வரி யினவண்டு புதிதுண்ணும் பருவத்து" (ஆ) "பொய்கைப் பூப் புதிதுண்ட வரிவண்டு" (இ) "புதுவமலர்தேரும் வண்டேபோல்" கலி. 26, 9; 74, 1; 98, 2. "வண்டும் புதிதுண்டு" நைடதம். இளவேனிற். 5. (பிரதிபேதம்) 1 நாளினின, 2 முயல்வனை, 3 கூற்றம்போல, 4 முயல்வனை
|