106

இதன் பொருள்.

படைபண்ணிப் புனையவும் பாமாண்ட 1பலவனைப்
புடைபெயர்ந் தொடுங்கவும் 2புறஞ்சேர வுயிர்ப்பவு
முடையதை யெவன்கொலென் றூறளந் தவர்வயி
னடைசெல்லாய் நனியேங்கி நடுங்கற்கா ணறுநுதால்

எ - து; நறுநுதால், படைக்கலங்களைப் புதியவாகப் பண்ணிக் கை செய்யவுங் காரியத்தின் நினைவாலே முயங்குதலைத் தவிர்ந்து பரத்தன் மாட்சிமைப்பட்ட பலவாகிய அணையிடத்தே கிடக்கவும் அது 3பொறாது அவன்புறத்தே புல்லுதலாலே யாம் பிரிந்தால் இவள் எங்ஙனம் ஆற்றுவளென்று நெட்டுயிர்ப்புக்கொள்ளவும் இவன் மனத்திலுடைய காரியம் எத்தன்மையதுகொலென்று கருதிக் கூட்டத்திற்கு இடையூறு வருமென்று கருதியவர்(?) நினைவிடத்தே நீ ஒழுகுதலைச் செய்யாயாய் மிகவும் ஏங்கி நடுங்காதேகொள். எ-று.

இது நிகழ்ந்தது நினைத்து வருந்தினாள்.

இது தரவு.

5 தொல்லெழி றொலைபிவ டுயருழப்பத் துறந்துநீ
வல்வினை வயக்குதல் வலித்திமன் 4வலிப்பளவை
நீள்கதி ரவிர் (1) மதி நிறைவுபோ னிலையாது
நாளினு நெகிழ்போடு நலனுடை னிலையுமோ

எ - து: இவள் இயற்கை நலங் கெட்டு வருத்தத்தே அழுந்த நீ பிரிந்து வலிதாகிய காவலாலே பகைவர் தந்த நாட்டை விளக்குதலை மிகவுந் துணிவை; அங்ஙனந்துணியுமளவில் நீண்ட கதிரினையுடைய விளங்குகின்ற திங்களினிறைவு, பின்னர்ஒழுகத் தேயுமாறுபோலநிலைநில்லாமல் நாடோறுந் தன்னிலைகுலைந்து கெடும் அழகு இவளுடன் நிலைபெறுமோ; எ - று.


ளாவன அந்நாடு காத்துப் பெற்ற அறம்பொரு ளின்பமெனவும், 'பகையறு பயவினை' என்பதற்குப் பகையறுதற்குக் காரணமாகிய நாடாகிய பயனைத்தரும் வினையெனவும் 'வேட்டபொருள்' என்பதற்கு அறம்பொரு ளின்பமெனவும் பொருளுரைத்துக் கொள்ளுக". என்பது தொல். அகத். சூ. 28. நச்.

1. நாளுக்கு நாள் குறையும் பொருளுக்கு மதிதேய்தலை உவமை கூறுதல் (அ) "குணமுதற்றோன்றிய வாரிருண் மதியிற், றேய்வன கெடுக நின் றெவ்வ ராக்கம்" மதுரைக். 195 - 6; (ஆ) "வானூர் மதியம்போல் வைகலுந் தேயுமே, தானே சிறியார் தொடர்பு" நாலடி. 125 (இ) "மதிப்பின்னீர பேதையார் நட்பு" குறள். 782 (ஈ) "குறைமதிக்கதிரென மாய்க்வென்றவமென்றான்" கந்த. மார்க்கண். 59. (உ) "முறைபோது மாசர் திருக் குறைமதிபோன் முழுது மிறும்"
இரகு. அரசியற் 9.

(பிரதிபேதம்) 1 பயிலணை, 2 புறஞ்சேரா, 3 பெறாது, 4 வலிப்பனை.