இடைநிலைப்பாட்டும் பெற்றுத் தனிச்சொல்லும் பெற்றுத் "தரவியலொத்தும்" (1) என்ற உம்மையான் ஏறியும் வருமென்றலிற் றரவின் மிக்க சுரிதகமும் பெற்று வந்த ஒத்தாழிசைக்கலி. (15) 17 | (2) | படைபண்ணி்ப் புனையவும் பாமாண்ட பலவணைப் புடைபெயர்ந் தொடுங்கவும் புறஞ்சேர வுயிர்ப்பவு முடையதை யெவன்கொலென் றூறளந் தவர்வயி னடைசெல்லாய் நனியேங்கி நடுங்கற்கா ணறுநுதால்; | | 5 | தொல்லெழிறொலைபிவ டுயருழப்பத் துறந்துநீ வல்வினைவயக்குதல் வலித்திமன் வலிப்பளவை நீள்கதிரவிர்மதி நிறைவுபோ னிலையாது நாளினு நெகிழ்போடு நலனுட னிலையுமோ; | | 9 | ஆற்றனோயடவிவ ளணிவாட வகன்றுநீ தோற்றஞ்சா றொகுபொருண் முயறிமன் முயல்வளவை நாற்றஞ்சா னளிபொய்கை யடைமுதிர் முகையிற்குக் கூற்றூழ்போற் குறைபடூஉம் வாழ்நாளு நிலையுமோ; | | 13 | வகையெழில்வனப்பெஞ்ச வரைபோக வலித்துநீ பகையறு பயவினை முயறிமன் முயல்வளவைத் தகைவண்டு புதிதுண்ணத் தாதவிழ் தண்போதின் முகைவாய்த்த தடம்போலு மிளமையு நிலையுமோ; எனவாங்கு; | | 18 | பொருந்தியான்றான்வேட்ட பொருள்வயி னினைந்தசொற் றிருந்தியயாக்கையுண் மருத்துவ னூட்டிய மருந்துபோன் மருந்தாகி மனனுவப்பப் பெரும்பெயர் மீளி பெயர்ந்தனன் செலவே. |
இது பகைவர் திறைதந்த நாடு காத்தற்கு (தலைவன்) பிரிகின்றமை யுணர்ந்து தலைவி வேறுபட்டமை கண்டு தோழி அவனை எதிர்ப்பட்டு அவளது ஆற்றாமையும் இளமையதருமையுங் கூறிச் செலவழுங்குவித்தமை தலைமகட்குக் கூறியது.
1. தொல். செய்.சூ. 137. 2. "படைபண்ணிப் புனையவுமென்னும் பாலைக் கலியுள் 'வல்வினை வயக்குதல் வலித்திமன்' என்பதற்கு வலிய போர்செய்து அப்பகைவர் தந்தநாட்டை விளக்குதற்கு வலித்தி யெனவுந், 'தோற்றஞ்சா றொகுபொருள்' என்பதற்குத் தோற்றம் அமைந்த திரண்டபொரு
|