எ - து: தேமொழீ! 1இத்தன்மையவாகிய மற்றத் தெய்வங்களினுடைய கூறுபாடுகளையும் மனத்தான் வேண்டிக்கொள்ளக்கருதித் தேடுகின்ற (1) பொருளான் உண்டாஞ் சிறப்புக்களை நினைத்துப் போகின்றவரிடத்து மனஞ் சுழலாதே கொள்; வற்கடமான காலத்தாலே வையங்கெட்டதாகில் அவ்வையத்திடத்தே மழையைப் பெய்விக்குங் கற்பினையுடையாளுடைய நிறங்கெட்டுப் பசப்புப் பரத்தலுண்டாமென்று கருதி அவருடைய முயற்சியிடத்தே அறக்கடவுள் விரைந்து சென்று விலக்கிற்று; 2இனிவருந்தல்; எ - று. 3இது (2) தங் குலதெய்வமன்றி எல்லார்க்கும் பொதுவாதலிற் கற்பிற்கு இயைவதோவென்றாள். அது "தெய்வமஞ்சல்" (3) என்பதனான் உணர்க. இது "செலவிடை யழுங்கல் செல்லாமை யன்றே, 4வன்புறை குறித்ததவிர்ச்சியாகும்" (4) என்பதனால் தலைவன் செலவழுங்கினமை கூறிற்று. இது சுரிதகம். இதனால், தலைவிக்குப் புணர்வென்னும் உவகையும் தலைவற்கு அசைவும் பிறந்தன. இது "தரவே தானு நாலடி யிழிபாய்" (5) எனச் சிறுமைக்கு எல்லை கூறிய நான்கடித்தரவிற்கு "இடைநிலைப்பாட்டே, தரவகப்பட்ட மரபின தென்ப" (6) என்றதன்கண் 5மரபினதென்ற இலேசால் நான்கடியாகிய
வளந் தரூஉம், பெண்டி ராயிற் பிறர்நெஞ்சுபுகாஅர்" (எ) "வான்றருங் கற்பின் மனையறம் பட்டேன்" (ஏ) "ஆங்கவை யொழிகுவை யாயினாயிழை, யோங்கிரு வானத்து மழையுநின் மொழியது" மணி. 22. 45 - 6, 53, 68 - 9. (ஐ) "வானம் பொய்யாது.....................பத்தினிப் பெண்டிரிருந்த நாடு." சிலப். 15: 145 -7.) (ஒ) "பீடு சான்மழை பெய்யெனப் பெய்தலும்,..........................பாடுசான்மிகு பத்தினிக் காவதே." வளையாபதி. (ஓ) "அன்னவர் கற்பினின்றன காலமாரியே" கம்ப. நாட்டுப். 59 (ஒள) "கற்பினர்த மெய்யுரையி னிற்கு, மீண்டையுள தெய்வதமு மாமுகிலும்" கந்த. மார்க்கண். 47. (ஃ) "இவளிடம் திங்கண்மும் மாரியும் பெய்திடுமே" வெங்கைக்கோவை. 376. (அஅ) "சாரதை யென்பவ, ளினக்கனப்பெய லீட்டுமெய்க் கற்பினாள்" விநாயக. மகோற்கடர். 5. "மாரிக்கு வித்தன்ன மடமாதர் கற்போங்கி மல்கும்" திருவாப்ப. இடவாபுர. 4. 1. பொருள். சிறப்புக்குக் காரண மென்பதை இந்நூற்பக்கம் 72: 1. 91 : 2. குறிப்புக்களால் அறிக. 2. "திருவாக்குந் தெய்வதையு மெஞ்ஞான்றுந் தேற்றவழிபாடு, செய்வதே பெண்டிர் சிறப்பு" என்பதும் குல தெய்வ வழிபாட்டைக் குறிப்பதாம். 3. தொல்.மெய்ப் சூ 24. 4. தொல். கற்பி. சூ. 44. 5. தொல். செய். சூ. 133. 6. தொல். செய். சூ. 134. (பிரதிபேதம்) 1 இத்தன்மையராகிய பிறதெய்வ, 2 இனிவருந்தலென்று ஆற்றுவித்தான், 3 இது குலத்தெய்வ, 4 வன்பொறை குறித்தறவிர்ச்சி, 5 மரபினென்றவிலைசால்.
|