103

முளிமுதன் மூழ்கிய வெம்மைதீர்ந் துறுகென
வளிதருஞ் செல்வனை வாழ்த்தவு மியைவதோ

எ - து:ஒளியினையுடைத்தாகிய பூணினையுடையாய்! காதலர் இவ்விடத்தேயிருந்து நாம் வருத்தமிகும்படி நம்மிடத்து அளித்தலை நீங்கிப் பொருளிடத்தே வேட்கை சென்று நம்மை அகன்றுபோம் அரிய வழியிடத்து உலர்ந்த சிறுதூறுகளிலே தங்கி வந்த வெப்பமாறி அவன்மேலே சேர்வாயாக வென்று பரவிக் காற்றைத் தருகின்ற ஞாயிற்றினை வாழ்த்துதலைச் செய்யவும் நங் கற்பிற்கு இயைவதொரு காரியமோ? அல்லவே; எ - று.

மழையையுங் காற்றையுந் தருகின்ற (1) ஞாயிறு பாலைக்குத் தெய்வ மாயினமை "மாயோன் மேய" என்னும் (2) சூத்திரத்தானுணர்க.

இவை மூன்றும், தாழிசை.

எனவாங்கு

எ - து: என்றுசொல்லி; எ - று.

ஆங்கு அசை.

இது தனிச்சொல்.

18 (3)  செய்பொருட்சிறப்பெண்ணிச் 1செல்வார்மாட் டினையன
தெய்வத்துத் திறனோக்கித் தெருமரறேமொழி
(4) வறனோடின்வையகத்து (5) வான்றருங் கற்பினா
ணிறனோடிப்பசப்பூர்த லுண்டென
வறனோடி விலங்கின்றவராள்வினைத் திறத்தே

1. (அ) பக்கம் 102: 2- ஆம் குறிப்புள் (அ) என்பதன் பின்னுள்ளது இங்கே ஆராய்தற்பாலது. (ஆ) பரிதியஞ் செல்வனும் திகிரியஞ் செல்வியும் பாலைக்குத் தெய்வமென்பர், அடியார்க்கு நல்லார். சிலப். ப. 18.

2. தொல்.அகத். சூ. 5.

3. "வினையின் றொகுதி காலத்தியலும்" என்னுஞ் சூத்திரத்து, ‘செய்பொருட்சிறப்பெண்ணி’ என்பதைமேற்கோள்காட்டி, ‘பொருட்கேற்ற காலத்தை விரிக்க’ என்பர் நச்சினார்க்கினியர். தொல். எச்ச. சூ. 19.

4. ‘வறனோ டுலகின்’ மணி. 15: 53.

5. (அ) "அருமழை தரல்வேண்டிற் றருகிற்கும் பெருமையளே" கலி. 39: 6. (ஆ) ”தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள், பெய்யெனப் பெய்யு மழை" குறள். 55. (இ) "பெண்பால் கொழுநன் வழிச்செலவு மிம்மூன்றும், திங்கண்மும் மாரிக்கும் வித்து." திரிகடுகம். 98. (ஈ) "வான்றருங் கற்பின் மனையுறைமகளிரிற், றான்றனி யோங்கிய தகைமைய ளன்றோ" மணி. 15: 77 - 8. (உ) "பொழிமழை தரூஉ, மரும்பெறன் மரபிற் பத்தினிப் பெண்டிரும்" மணி. 16: 49 - 50. (ஊ) "மண்டினி ஞாலத்து மழை

(பிரதிபேதம்) 1 செல்வர் மாட்டு.