(9) | (1) | னையிழா யீங்குநாம் புலம்புறப்பொருள்வெஃகி முனையென்னார் காதலர் முன்னிய 1வாரிடைச் | | (2) | சினைவாடச்சிறக்குநின் சினந்தணிந் தீகெனக் கனைகதிர்க்கனலியைக் காமுற லியைவதோ |
எ - து: புனைந்த பூணினையுடையாய்! காதலர் இவ்விடத்தேயிருந்து நாந் தனிமையுறும்படி பொருளை விரும்பிப் பகைப்புலமென்று கருதாராய்ப்போதற்கு 2நினைந்த அரியவழியிடத்தில் மரக்கொம்புகள் வாடும்படியாகச் சிறக்கும் நின் (3) சினந் தணிவதாகவென்று பரவிச் செறிந்த கதிரையுடைய ஞாயிற்றை நாம்வேண்டிக்கோடலும் நங்கற்பிற்கு இயைவதொரு காரியமோ? அல்லவோ; எ-று. (4) நாமென்னும் படர்க்கையுளப்பாடு இடவழுவமைதி; தணிந்தீக, வியங்கோட் டிரிசொல்; விகாரமாய் நின்றது. 13ஒளியிழா யீங்குநாந் துயர்கூரப் பொருள்வயி னளியொரீஇக்காதல ரகன்றேகு மாரிடை
1. ‘புனையிழாய்....................காமுற லியைவதோ’ என்பது தெய்வம் பராயதற்கு மேற்கோள். தொல். அகத். சூ. 45. ‘எஞ்சியோர்க்கும்’ இளம். 2. (அ) "பாலைக்கு, ‘சினை, வாடச் சிறக்குநின் சினந்தணிந் தீகெனக், கனைகதிர்க் கனலியைக் காமுற லியைவதோ’ எனவும், ‘வளிதரு செல்வனை வாழ்த்தவு மியைவதோ’ எனவும் ஞாயிற்றைத் தெய்வமாக்கி அவனிற் றோன்றியமழையினையுங் காற்றினையும் அத்தெய்வப் பகுதியாக்கிக் கூறுபவாலெனின், எல்லாத்தெய்வத்திற்கும் அந்தணர் அவிகொடுக்குங்குகால் அங்கி ஆதித்தன்கட் கொடுக்கு மென்பது வேத முடிபாகலின், ஆதித்தன் எல்லா நிலத்திற்கும் பொதுவென மறுக்க. இவ்வாசிரியர் கருப்பொருளாகிய தெய்வத்தினை முதற்பொருளோடுகூட்டிக் கூறியது தெய்வ வழிபாட்டுமரபு இதுவே, ஒழிந்தது மரபன்று என்றற்கு. எனவே அவ்வந்நிலத்தின் தெய்வங்களே பாலைக்குந் தெய்வமாயிற்று" என்பது (தொல். அகத். சூ. 5.நச்) காணப்படுவது. (ஆ) இப்பகுதியைத் தெய்வ மஞ்சலுக்கு மேற்கோள் காட்டித் தெய்வத்திறம் நோக்கித் தெருமந்த தென்பர் (தொல்.மெய்ப். சூ. 24.) பேராசிரியர். இ - வி. நூலாரும் தெய்வ மஞ்சலுக்கு மேற்கோள் காட்டுவர். இ - வி. சூ. 580. 3. சினம் என்றது வெம்மையை, ‘காய்சினந் தவிராது கடலூர் பெழுதரு, ஞாயிறு’ புறம். 59. என்பதன் உரையைப் பார்க்க, ‘கதிர் சினந்தணிந்த கையறுமாலை’ என்பது குறுந். 387. 4. யாமென்பது படர்க்கை யுளப்பாடென்றும் நாமென்பது முன்னிலை யுளப்பாடென்றும் தொல்காப்பிய வுரையில் கல்லாடர் கூறுதலால் இங்கு மூலம் உரை விசேடவுரை மூன்றிலு முள்ள நாமென்பது யாமென இருக்க வேண்டியது போலும். (பிரதிபேதம்) 1 ஆற்றிடை, 2 நினைந்தவழி.
|