எ - து: துயிலின்றிப் பசந்த கண்கள் வருத்தத்தை யுடையவாய் நீர்மல்க நிறம்வாடி அழகு கெடுகையினாலே வளைகள் வணங்கின முன் கையினின்றுங் கழல வெற்றியையுடைய அழகழிவுக்கு அஞ்சாதேபிரிந்தவர் கூற்றில் இப்பொழுது செய்வதாக நினைப்பதொரு காரியமுடையேன்; அத்தாற் பெற்றதென்? அக்காரியந்தானும் ஆராயுங்கால் நங்கற்பிற்குப் பொருந்துவதன்றாய் இராநின்றது; எ - று. இது தரவு. (5) | (1) தொன்னலந் தொலைபீங்கியாந் துயருழப்பத் துறந்துள்ளார் துன்னிநங் காதலர் துறந்தேகு மாரிடைக் கன்மிசை 1யுருப்பறக் கனைதுளி சிதறென வின்னிசை (2) யெழிலியை யிரப்பவு மியைவதோ |
எ - து: நங்காதலர் யாம் இயற்கை நலமுங் கெட்டு இவ்விடத்தே, யிருந்து வருத்தத்திலே அழுந்தும்படி நம்மைக் கைவிட்டுப் பின்னர் நினையாராய்ப் பொருண்மேல் அன்பு நெருங்கி நம்மேல் அன்பைத் துறந்துபோம் அரியவழியிடத்திற் கல்லின்மேல் உண்டான வெப்பம் நீங்கும்படி செறிந்த துளியைச் சிதறுவாயாக வென்று பராய் இனி்ய ஓசையை யுடைய (3) மேகத்திற்கு உரிய ஞாயிற்றை இரத்தல்செய்யவும் 2நங்கற்பிற்கு இயைவ தொருகாரியமோ? அல்லவே; எ - று.
திறத்தினி நாடுங்கால்' என்பது கேற்கோள். தொல். வினை. சூ. 32. சே; நச்; தொல். எச்ச. சூ. 19. நச். 1. “தொன்னலந்................காமுறலியைவதோ" என்பதனொடு "ஞாயிறு காயாது மரநிழற் பட்டு, மலைமுதற் சிறுநெறி மணன்மிகத் தாஅய்த், தண்மழை தலைய லாகுக நந்நீத்துச், சுடர்வாய் நெடுவேற் காளையொடு, மடமாவரிவை போகியசுரனே" குறுந். 378. "சூன்முதிர் கொண்மூ மின்னுபு பொழியக், கானங் கடுமை நீங்குக, மானுண் கண்ணிபோகிய நெறியே" தமிழ்நெறி, என்பவை ஒருவாறு ஒப்பு நோக்கற் பாலன. ‘தொன்னலம்’ கலி. 27 : 14; 77 : 13; 100 : 20; 124 : 11. 2. எழிலி கனலி வளிதருசெல்வ னென்பன "வீறுமழை வெய்யசுடர் வீசுவளி யென்றிவை தமக்குதவுகைம், மாறு முளதோ" "பொழி யருள் வலக்கணின்று புரவியே ழுடையோன் காற்றுச், சுழிபுனலு மிழுமேகந் தோன்றின" எனச் சேர்த்துக் கூறப்பெறுதல் காண்க. 3. (அ) "வெய்ய வன்கணுள தாயவன் மறைந்திட வெழு மேகமே" மோகவதைப்பாணி. (ஆ) "பரிதி யுலகமெல்லாம், விருப்பவிர் மேகம் விளைப்பதன்றோ" தணிகை. களவு 492. (இ) "தினஞ் செய்வோன்.........பைங்கூழ்கள,் கரிந்தன தளிர்ப்ப வெள்ளி வீழன்ன கணமழை பொழிவது கடுப்ப" நைட. அன்னத்தைத். 5. (பிரதிபேதம்) 1 உருப்பிற, 2 கற்பிற்கு.
|