எ - து: 1என்று யான்சொன்ன அனையவை செய்த நன்மைகளை நினைத்து அவை கெடாமற்பாதுகாத்துப் பின்னர் நீ ஆராய்ந்து தேடுகின்றவற்றை ஆராய்ந்துபார். அக்கல்வியாலுண்டாம் வளப்பமோ இவ்விடத்தே யிருந்து நாடோறுஞ் செய்துகொள்ளுஞ் செயலாயிருக்கும்; அக்கல்வி, முளையையொத்த நிரையினையுடைய முறுவலையுடையாருடைய திரளுள்ளே உயர்த்தாராய்ந்த இவளுடைய (1) இளமை போனபின்பு அவ்விளமையுந் தருவதொன்றோ? எ - று. அனையவையென்றது, நிறத்தையும் முகத்தையும் கண்ணையும். வளமையோவென்னும் ஓகாரம் இழிவுசிறப்பு; இளமையுமென்னும் உம்மை சிறப்பு; தருவதோவென்னும் ஓகாரம் எதிர்மறை. "ஓதலுந் தூது முயர்ந்தோர் மேன" (2) இதனா னுணர்க. இது சுரிதகம். இதனால், தோழிக்கு இழிவுதோன்றிற்று; தலைவற்கு அசைவு பிறந்தது. இஃது ஒன்பதடித் தரவும் நான்கடித் தாழிசையும் தனிச்சொல்லும் நான்கடிச்சுரிதகமும் பெற்ற ஒத்தாழிசைக்கலி. (14) (16). | (3) பாடின்றிப் பசந்தகண் பைதல பனிமல்க வாடுபு வனப்போடி வணங்கிறை வளையூர வாடெழி லழிவஞ்சா தகன்றவர் திறத்தினி நாடுங்கா னினைப்பதொன் றுடையேன்மன் னதுவுந்தான்; |
வருதற்கு "இளமையுந் தருவதோ விறந்த பின்னே" என்பது மேற்கோள் ; தொல். வினை. சூ. 31. கல்; 32. நச். 1. (அ) இளமை யென்பது குழவிப் பருவமொழிந்த தாகிய யௌவன மென்னும் பொருளில் வந்ததென்பதற்கு நச். ‘இளமையுந் தருவதோ’ என்பதை (சீவக. 165) மேற்கோள் காட்டியிருப்பதும் (ஆ) இளமை யாவது காமச்செவ்வி நிகழ்வதொருகாலம். (தொல். கிளவி. 57.) என விளக்கியிருப்பதும். ஈண்டு அறிதற்பாலன. (இ) "இறந்தபின் இளமை வாராது" என்பது தொல். வினை. சூ. 35 சே. 2. தொல். அகத். சூ. 26. 3. இச்செய்யுள், நான்கடித்தரவும் நான்கடியான் மூன்றுதாழிசையும் தனிச்சொல்லும் ஐந்தடிச் சுரிதகமும் ஒத்தாழிசைக் கலிப்பாவில் வந்ததற்கும் (தொல். செய். சூ. 131 ‘போக்கியல்’ இளம்; சூ. 137. பே. நச்.) தலைவியாற்றாமைகண்டுழிப் பிரிந்ததலைவன் மீண்டு வந்தானெனத் தோழி கூறியதற்கும். (தொல். அகத். சூ. 45. நச்.) மேற்கோள். (பிரதிபேதம்) 1 அனையவை.
|