இல்லறத்தே நின்று முன்னுள்ள மாசறுத்து வானப்பிரத்தனாமென்றது. இஃது "அந்தரத் தெழுதிய வெழுத்தின் மான, வந்த குற்றம் வழிகெட வொழுகல்" (1) ஆம். பாம்பு சேர்விடமும் பாடம். 18 | பின்னிய தொடர்நீவிப் பிறர்நாட்டுப் படர்ந்துநீ மன்னிய புணர்ச்சியான் மறுத்தா லொல்வதோ புரியவிழ் நறுநீலம் புரையுண் (2) கண் கலுழ்பானாத் திரியுமிழ் நெய்யேபோற் றெண்பனி யுறைக்குங்கால் |
எ - து: இவளுடைய முறுக்கு அவிழ்ந்த நறிய நீலத்தையொக்கும் மையுண்கண்கள் அமையாவாய் அழுது, எரிகின்ற திரிகான்ற நெய்போலச் சுடும்படி தெள்ளிதாகிய நீரைத்துளிக்குங்கால் வேற்று நாட்டிடத்தே போய் நின்னைப் பிணித்த ஆசையாகிய சங்கிலியை அறுத்து நிலைபெற்ற தத்துவப் பொருள்களைக் கூடிய கூட்டத்தாலே மீட்டல் பொருந்துமோ; எ - று. இது (3) சன்னியாசம் வேண்டுமெனக் கொண்டமை கூறிற்று. இது தலைவன் ஓதற்பிரிவாற் பெறும்பயன் கூறியவற்றை உணர்ந்த தோழி, அவற்றைக்கூறி அவை எக்காலத்துஞ் செய்யலாம்; இளமைமீட்டல் இவற்றால் ஒல்லாதென்றாள். இவை மூன்றும், தாழிசை. எனவாங்கு, 1ஆங்கசை. இது தனிச்சொல். 23 | | அனையவை போற்றி 2நினைஇயன நாடிக்காண் வளமையோ வைகலுஞ்செயலாகு மற்றிவண் | | (4) | முளைநீரைமுறுவலா ராயத்து ளெடுத்தாய்ந்த | | (5) | 3விளைமையுந் தருவதோவிறந்த பின்னே |
1. தொல். கற்பி. சூ. 5 2. திரிக்குழாய் உகுக்கும் நெய் கண்ணீர்த் துளிக்குவமையாதல். "கனல் சேர்ந்த திரிநெய்போன், மைச்சென்ற மலர்நீல வாட்டடங்கண் புனலுறைப்ப" திருவானைக்காப். சம்புமுனி தவம்புரி படலம். 35 "திரிவீழ்நெய்போற், செறிந்துகு கண்ணீர் மார்பிற் செறிதுகள் கழுவா நிற்ப" பூவாளூர்ப். இரதியருச்சனை. 33. என்பவற்றாலும் அறியலாகும். திரிக்குழாய் நெய்யுகுத்தல்: "சொரிசுரை கவரு நெய்வழி புராலிற், பாண்டில் விளக்குப் பரூஉச்சுட ரழல்" பதிற். (47 : 5 - 6.) என்புழியும் கூறப்பெற்றுள்ளது. 3. சன்னியாசமாவது: தன்பொருளினிடத்தும் மனைவிமக்கண் முதலிய சுற்றத்தினிடத்தும் தன்னிடத்துமுள்ள ஆசையை முற்றத்துறத்தல். 4. "முளைநிரை முறுவ லொருத்தியொடு" ஐங்குறு, 369. 5. பின்னென்பது வினையெச்சமாக வருங்கால் இறந்த காலச்சொற் பற்றி (பிரதிபேதம்) 1 அசை, 2 நினைஇயவை, 3 இளமையும்.
|