(1) பொருள்கொண்டு புண்செயி னல்லதை யன்போ டருள்புற மாறிய வாரிடை யத்தம் எ - து; வந்து கூடுதலையுடைத்தாகிய படையினையுடைய படையோடே அரசர்கள் வந்து போர் செய்யினும் அழகினையுடைய சிலைமரத்தாற் செய்த வலிய வில்லினது முறுக்குதலையுடைய நாணிலெழுந்த, சிங்கம் இடித்தாற்போன்ற சிறுநாணொலியாலே அவ்வரசரை முதுகுகாண்டலன்றி அம்பை வில்லிலே தொடுத்தலை நாணும், கடிய துடியினது ஆரவாரத்தினையும், வலியினை யுடைத்தாகிய பார்வையினையுடைய கழுத்துவலிய கலையினது கொம்புபோலே நேர்போகாமற் றிருகி முறுக்குண்டு தாழ்ந்த தாடியினையும், வெவ்விதான கடிய சினத்தினையுமுடைய கெடாத மறவர், வழி போவாருடைய பொருளைப் பறித்துக்கொண்டு அவர்க்குப் புண்ணைக் கொடுத்து விடுதலன்றி, அன்போடே அருளும் அவ்விடத்தினின்றுங் கைவிட்டுப்போன அரிய இடத்தையுடைய காட்டிடத்தே : எ - று. நாணும் மறவரென்க. இது தரவு. அன்றியென்னும் வினையெச்ச வினைக்குறிப்பு அல்லதையெனவினைக் குறிப்பு முற்றாய்த் திரிந்தது. (2) அருள் அன்பிற்குக் காரணமாய் மனத்து நிகழ்வது. 10. | புரிபு நீ புறமாறிப் போக்கெண்ணிப் புதிதீண்டிப் பெருகிய செல்வத்தாற் பெயர்த்தர லொல்வதோ (3) செயலையந் தளிரேய்க்கு மெழினல மந்நலம் 1பயலையா லுணப்பட்டுப் பண்டைநீ ரொழிந்தக்கால் |
எ - து: நீ புறப்பொருளை விரும்பி அகப்பொருளைக் கைவிட்டு அதிலே போனதெண்ணி இவளுடைய அழகையுடைய நிறம் அசோகினது அழகையுடைய தளிரையொக்கும் அத்தன்மைத்தாகிய நிறம் பசலைநிறத்தாலே கைக்கொள்ளப்பட்டுப் பண்டைநீர்மைபோனக்கால் நீ போக்கெண்ணுகையினாலே முன்பு உள்ளதன்றிப் புதிதாகத் திரண்டு பெருத்த செல்வத்தினாலே மீட்டல் பொருந்துமோ; எ - று. நீ புறம்புரிபு மாறியென்க.
சொல்லாய் வந்ததற்கு, "மருப்பிற் றிரிந்து மறிந்து வீழ்தாடி" என்பது மேற்கோள். தொல். உவம. சூ. 11. இளம். 1. "பொருள் கொண்டு புண்செயி னல்லதை யார்க்கு, மருளிலெயினர்" சிலப். 12. [குறிப்பும் பார்க்க. 2. "அருளுடைமை" என்பதன் பொருளும் இந்தூற் பக்கம். 28 : 3. 3. "செயலையந் தளிரேய்க்கு மெழினலம்" என்பது தத்தமரபிற் றோன்றுமன் பொருளே யென்பதற்கும் (தொல். உவம. சூ. 17 இளம்.) பொதுச் சூத்திரத்திற்கூறிய வாய்பாடு உருவுமத்தின்கண் அருகி வருதற்கும் (தொல். உவம. சூ. 16. பே.) மேற்கோள். (பிரதிபேதம்) 1 பசலையால்
|