94

10புரிபுநீ புறமாறிப் போக்கெண்ணிப் புதிதீண்டிப்
பெருகிய செல்வத்தாற் பெயர்த்தர லொல்வதோ
செயலையந் தளிரேய்க்கு மெழினல மந்நலம்
பசலையா லுணப்பட்டுப் பண்டைநீ ரொழிந்தக்கால்;
14பொய்யற்ற கேள்வியாற் புரையோரைப் படர்ந்து நீ
மையற்ற படிவத்தான் மறுத்தர லொல்வதோ
தீங்கதிர் மதியேய்க்குந் திருமுக மம்முகம்
பாம்புசேர் மதிபோலப் பசப்பூர்ந்து தொலைந்தக்கால்;
18 பின்னிய தொடர்நீவிப் பிறர்நாட்டுப் படர்ந்துநீ
மன்னிய புணர்ச்சியான் மறுத்தர லொல்வதோ
புரியவிழ் நறுநீலம் புரையுண்கண் கலுழ்பானாத்
திரியுமிழ் நெய்யேபோற் றெண்பனி யுறைக்குங்கால்;
எனவாங்கு;
23அனையவை போற்றி நினைஇயன நாடிக்காண்
வளமையோ வைகலுஞ் செயலாகு மற்றிவண்
முளைநிரை முறுவலா ராயத்து ளெடுத்தாய்ந்த
விளைமையுந் தருவதோ விறந்த பின்னே.

இது பிரிவுணர்த்திய தலைமகற்குத், தோழி, தலைமகளது ஆற்றாமையும் இளமைய தருமையுங் கூறி, நீர் பிரிந்து செய்யக்கருதியவை எக்காலத்துஞ் செய்யலாம், பொருளால், கழிந்த இளமை மீட்க லாமோவெனக்கூறியது,

இதன் பொருள்,

(1)அரிமா னிடித்தன்ன வஞ (2) சிலை வல்விற்
புரி (3) நாண்புடையிற் புறங்காண்ட லல்லா


1. (அ) "தேயத்தின் றலைவன் மைந்தன் சிலையைநா ணெறிந்தான் றீய, மாயத்தின் வினையை வல்லார் நிலையென்னை முடிவின்மாரி யாயத், தினிடியி தென்றே யஞ்சின வுலகம் யானை, சீயத்தின் முழக்கங் கேட்டல் போன்றனர் செறுநரெல்லாம்." கம்ப. முதற்போர். 142. (ஆ) "அரிமானிடித் தன்ன வஞ்சிலை" என்பது அன்னவென்பது உவம வுருபாய் வருதற்கு மேற்கோள். நன். பொது சூ. 16. மயிலை.

2. (அ) "சிலைவிற் கானவன்" குறுந், 385. (ஆ) “சிலைவிற்பகழி" ஐங்குறு, 363 (இ) "சிலைமாண் வல்வில்" அகம், 69 ; 15; (ஈ) "வணங்குசிலைச் சாபம் வார்கணை கொளீஇ" பெருங், (3) 20; 8; என்பவையும் (உ) “சிலைவிற் சேவகஞ் செய்து" திருவிளை, சுந்தரப் பேரம்பு, 44. (ஊ) "கண்ணுடை நுதலவன் சிலைவிலினோன்மை நூறிய புதல்வனை" கம்ப, பள்ளியடை 50, என்பவையும் பார்க்க. 3. (அ) "ஒருகார்முக மிருகால்வளை வுறவேகுனித் துகுதே, னருகா