எ - து: பொருள்தேடும் 1முறைமையினின்று நீங்கிப் பொருள் தேடுவார்க்கு அப்பொருள் தான் 2அவரைவிட்டு நீங்கி இம்மையிலும் மறுமையிலும் 3பகையாந்தன்மையை அறியாயோ ; எ - று. 4இவளிறந்து படப்போய்ப் பொருடேடலிற் செம்மையினிகந்தென்றாள். இவை முன்றும், தாழிசை. 16 | அதனால் எம்மையும் பொருளாக மதித்தீத்தை நம்முணாங் (1) கவவுக்கை விடப்பெறும் பொருட்டிறத் தவவுக்கை விடுத லதுமனும் பொருளே. |
எ - து: பொருள் இத்தன்மைத்தாகையினாலே அப்பொருளே யன்றி எம்மையும் பொருளாக மதிப்பாய்; நம்முண் முயங்கின முயக்கத்தைக் கைவிட்டுப் போகையினாலே பெறுகின்ற பொருட் கூற்றிடத்து அவாவைக் கைவிடுவாயாக, அதுவே நிலைபெறும்பொருள் ; எ - று. மதித்தீத்தை, மதியென்னும் முன்னிலையேவற் றிரிசொல். அவவெனக் (2) குறியதன் இறுதிச்சினை கெட்டு நின்றது. கைவிடுதல் "இற்றெனக்கிளத்தல்" போல (3) நின்றது. அதனால், தனிச்சொல்; எஞ்சியது, சுரிதகம். இதனால், 5தலைவற்கிழிவு பிறந்தது, தோழிக்குச் சூழ்ச்சி பிறந்தது. இஃது ஒன்பதடித்தரவும் சிறுமைக்கு எல்லைகூறிய ஈரடித்தாழிசையும் பொருள்பெற்ற தனிச்சொல்லும் மூன்றடிச் சுரிதகமும் பெற்ற ஒத்தாழிசைக்கலி. (13) (15). | (4) அரிமா னிடித்தன்ன வஞ்சிலை வல்விற் புரிநாண் புடையிற் புறங்காண்ட லல்லா லிணைப்படைத் தானை யரசோ டுறினுங் கணைத்தொடை நாணுங் கடுந்துடி யார்ப்பி | 5 | னெருத்து வலிய வெறுழ்நோக் கிரலை மருப்பிற் றிரிந்து மறிந்துவீழ் தாடி யுருத்த கடுஞ்சினத் தோடா மறவர் பொருள்கொண்டு புண்செயி னல்லதை யன்போ டருள்புற மாறிய வாரிடை யத்தம் ; |
1. "கழுமிய காதலொடு கவவுக் கைவிடாது" பெருங், (3): 23 : 10 2. தொல், உயிர்மயங்கு, சூ, 32, உரைபார்க்க, 3. தொல், கிளவி, சூ, 19, 4. கலிப்பாவின் கண் ஆசிரியச் சுரிதகத்து ஈற்றயலடி நாற்சீராகியும் வருமென்பதற்கு இச்செய்யுள் (தொல், செய், சூ, 16, 'முச்சீர்' இளம்), மேற். (பிரதிபேதம்) 1 முறைமையினீங்கி, 2 தம்மைவிட்டுநீங்கி, 3 பகையாவதை,4 இவளிறந்து படப்பொருடேடலிற், 5 தலைவற்கிழவும் தோழிக்குச் சூழ்ச்சியும் பிறந்தன.
|