(1) மருள், மருளியெனப் பகுதிப்பொருள் விகுதியாய் நின்றது, யாழ, அசை. 12. காதலா ரெவன்செய்ப பொருளில்லா தார்க்கென வேதிலார் கூறுஞ்சொற் பொருளாக மதித்தாயோ எ - து: கையிற்பொருளில்லாதவர்கட்குத் தம்மாற்காதலிக்கப் பட்டார் என்ன காரியத்தைச் செய்வரென்று உறவுபோல இருந்து உறுதியல்லன கூறுவார் கூறும் மொழிகளை நினக்குப் பொருளாக மதித்தாயோ; எ - று. (14). | (2) செம்மையி னிகந்தொரீஇப் (3) பொருள் செய்வார்க் (4) கப்பொரு ளிம்மையு மறுமையும் பகையாவ தறியாயோ |
1. (அ) மருளியென்பதில், 'இ' பகுதிப் பொருள் விகுதியென்பதே இவர் கருத்தென்பதை, சீவக, 247-உரையில் இவர் எழுதியிருப்பதும் வற்பறுத்தும், (ஆ) "இரவில் வந்து மீளியுரைத்தி" (கோவை, 151.) என்பதன் விசேட வுரையில் 'மருடல் வெகுடலென்பன, மருளி, வெகுளியென நின்றாற்போல மீடலென்பது மீளியென நின்றது' என்பர்; பேராசிரியர். 2. (அ) "செப்ப முடைய்வ னாக்கஞ் சிதைவின்றி, யெச்சத்திற் கேமாப்புடைத்து" (ஆ) "நன்றே தரினு நடுவிகந்தா மாக்கத்தை, யன்றோயொழிய விடல்" (இ) "அழக் கொண்ட வெல்லா மழப்போமிழப்பினும், பிற்பயக்கு நற்பா லவை" (ஈ) "சலத்தாற் பொருள் செய்தே மார்த்தல் பசுமட், கலத்துணீர் பெய்திரீஇ யற்று" (உ) "அருளொடு மன்பொடும் வாராப் பொருளாக்கம் புல்லார் புரள விடல்" குறள், 112, 113, 659, 660, 755, என்பவைகளும் (ஊ) "பொன்மணி தரளந் தேனுமற் றுள்ள பொருளுடை யோனைவஞ் சித்துப், பன்மறை பயிலு மந்தணர்க் கீந்தா லீந்தவன் பரகதியடையா, னன்ம..........யுடையோன் றனைப்பலன் சாரு நரகம்வஞ்சித்தவற் கெய்துந், தன்மநன் னெறியார்ச் சிதப்பொரு ளீந்தாற்சார்குவ னிகபர மிரண்டும்" மச்ச, பிரயாகையிற், 10, (எ) "படுமுன் பொருட்குப் புதுவெள்ளம் பழையநீரை யுடைப்பது போற், கெடுதிபயக்குங் குடிகெடுக்குங் கெடாதபெருந்துன் பமும்விளைக்கும,் வடுமிக் கியன்ற பழியென்றும் வளர்க்கு மதனான் மறுமையினு, நடுவு நிலையிற்றிரிந்தொருவர் நன்பொன்கவரக் கருத்தெண்ணேல்" விநாயக அரசியற், 33, என்பவையும். (ஏ) சத்தியகோடன் சரிதமும் இங்கே அறியத்தக்கன. (ஐ) "செம்மையி னிகந்தொரீஇ " என்பதனோடு 'நடுவிகந் தொரீஇ' என்பதை, (கலி, 8: 1.) ஒப்புநோக்குக. 3. பொருள் செய்தல் : இந்நூற் பக்கம், 38. 1. குறிப்புப்பார்க்க. 4. "அப்பொரு, ளிம்மையு மறுமையும் பகையாவ தறியாயோ" என்பதில் ஓகாரம் ஈற்றசையாய் வந்ததென்பர், நேமி, உரை, நேமி, சொல், 55.
|