| (1) | அணைமருனின்றுயி (2) லம்பணைத் தடமென்றோட் | | (3) | டுணைமலரெழினீலத் தேந்தெழின் மலருண்கண் மண (4) மௌவன் முகையன்ன மாவீழ்1வார்நிரைவெண்பன் | | (5) | மணநாறுநறுநுதன் (6) மாரிவீ ழிருங்கூந்த | 5 | | லலர்முலையாகத் தகன்ற வல்குற் சிலநிரை வால்வளைச்செய்யா யோவெனப் பலபல கட்டுரை பண்டையிற்பாராட்டி யினிய சொல்லி யின்னாங்குப் பெயர்ப்ப | | (7) | தினியறிந்தேனது துனியா குதலே |
1. (அ) "அணைமருளின்றுயில்...........................துனியாகுதலே" என்பது போக்கின்கண் தலைவன் தலைவியைப் புகழ்ந்ததற்கு மேற்கோள். தொல், பொருளியல். சூ. 34. நச். (ஆ) "அணைமருளின்றுயில்........பண்டையிற் பாராட்டி" என்பது களவு காலத்து நலம் பாராட்டிய தலைமகன் கற்புக்காலத்து மொழிநலம் பாராட்டுதற்கு மேற்கோள்; தொல், பொருளி. சூ. 31. 'நிகழ்தகை' இளம். (இ) "அணைமென்றோள்" பரி, 7 : 55. கலி. 66 : 9 (ஈ) "அணைபுரை மென்மை யமைபடு பணைத்தோள்" பெருங். (2) 15 : 72. (உ) "செம்பஞ்சி யணையளைய வாடமைத்தோள்" சீவக. 170. (ஊ) "பணையெழி லணைமென்றோள்" கலி. 1 : 9. 2. "அம்பணைத்தடமென்றோள்" கலி. 40. 8. "தடமென் பணைத்தோள்" அகம். 21. 3. “துணைமல ரெழினீலத் தேந்தெழின் மலருண்கண்" என்பது 'அன்னபிறவும்' என்பதனாற் கொள்ளப் படுவன வற்றுள் அத்து உவமையுணர்த்துஞ் சொல்லாய் வருதற்கு மேற்கோள், தொல். உவம. சூ. 11. இளம். 4. "மௌவல் வான் முகைத், துணை நிரைத்தன்ன மாவீழ் வெண்பல்" "முகைநிரைத் தன்னமாவீழ் வெண்பல்" அகம், 21: 1-2, 162 : 12 "பன்னிற முல்லை" திணைமொழியைம். 22. 5. ‘தேங்கமழ் திருநுதல்’ முருகு, 24; நற், 62; அகம்: 389. 6. "மாரிவீ ழிருங்கூந்தல்" கலி, 60: 2, 131: 21, வினையுவம முதலியவற்றிற்குப் பாகுபடுத் துணர்த்தப்பட்ட சொற்களன்றி மரபாற் (மரபு - பயிற்சி) பிறசொல்லும் வருமென்பதற்கு இத்தொடர் மேற்கோள், தொல், உவம. சூ. 17. இளம். 7. (அ) "இனியறிந்தேனது துனியாகுதலே" என்னும் இவ்வடி குறுந், 84-இல், 2-ஆம் அடியாகவும் காணப்படுகின்றது, (ஆ) இனியறிந்தேன்" குறள். 1083. (பிரதிபேதம்) 1 வானிரை.
|