(1) | வுரல்போ லடிய (2) வுடம்புயங் கியானை யூறுநீரடங்கலி னுண்கயங் காணாது சேறு சுவைத்துத்தஞ்செல்லுயிர் தாங்கும் (3) புயறுளி மாறிய (4) போக்கருவெஞ்சுரம் |
எ - து: போர்த்தொழிலிலே மிகுகின்ற சினத்தையுடைய அரசன் கோபித்துச் சென்று விட்ட பகைப்புலத்தை நெருப்புத் தின்றாற்போல நெருப்புத்தின்ற கரியினையுடைய வறந்த நிலத்திடத்தனவாகிய பொரி மலர்ந்தாற்போன்ற புள்ளிகளை யுடையவாகிய மடப்பத்தையுடைய மான்கள் உணவுகளைக் காணாவாய்த் திரிந்த கொம்பினையுடைய ஏற்றோடே பேய்த் தேரை நீரென்று கருதி உண்டற்பொருட்டு ஓட, மரல்வாடும்படி மலைகள் கொதிக்க, ஊணின்றி மந்திகள் வருந்த, உரல்போன்ற அடிகளையுடையவாகிய, உடம்பு வருந்திய யானைகள் ஊறுகின்ற நீரூற்று அடங்கலின் நீர் உண்டற்கு வேறோர் நீர்நிலை காணாமற் சேற்றில் ஈரத்தை நுகர்ந்து தம் போகின்ற உயிரைக்காக்கும் மேகந் துளித்தலைத் தவிர்ந்த செலவரிய வெய்ய 1சுரத்தே ; எ - று. "பன்றி புல்வா யுழையே கவரி, யென்றிவை நான்கு மேறெனற்குரிய." (5) இதனான் ஏறென்றார். 2மேய்ந்தகரி, உண்ட எச்சில்போல நின்றது. ஏற்றொடு என்பது ஏறொடு என விகாரமாயிற்று. சுரத்தென்னும் அத்து விகாரத்தாற் றொக்கது. இது தரவு. (10). | (6)எல்வளை யெம்மொடு நீவரின் யாழநின் மெல்லியன் மேவந்த சீறடித் தாமரை |
1. "உரல்புரை பாவடி..........யொருத்தல்" கலி. 21. 2. 'உடம்புயங்கியானை' கலி. 12: 4. 3. புயறுளி மாறியசுரம்: "விழுந்ததுளி யந்தரத்தே வேமென்றும் வீழி, னெழுந்துசுடர் சுடுமென் றேங்கிச் - செழுங்கொண்டல், பெய்யாத கானகத்தே" 4. போக்கரு வெஞ்சுரம் கலி. 23: 3. 5. தொல். மரபியல், சூ. 38. 6. (அ) "எல்வளை யெம்மொடு.....................கறுக்குந வல்லவோ" என்பது உடன்கொண்டு போகவேண்டு மெனச் சொல்லியவழித் தலைவன் கூறியதற்கும், தொல். கற். சூ. 5. இள ; (ஆ) தலைவிக்குத் தலைவன் உடன் போக்கு மறுத்துக் கூறியதற்கும் தொல். அகத். சூ. 45. நச் ; (இ) தலைவி உடன்வரக் கருதியவழித் தலைவன் எம்மொடு நீவரக் கருதியநிலம் சுரமென்று கூறியதற்கும் தொல். பொருளியல். சூ. 22 நச். மேற்காள். (பிரதிபேதம்) 1சுரத்தை, 2 வெந்தகிரி.
|