| (1) | பொரிமலர்ந்தன்ன 1பொறிய மடமான் றிரிமருப் பேறொடு (2) 2தேரறற்கோட | 5 | (3) | மரல்சாய (4) மலைவெம்ப (5) மந்தி யுயங்க |
(இ) "ஊரெரி கவுர வுருத்தெழுந் துரைஇப், போர்சுடு கமழ் புகைமாதிர மறைப்ப" (பதிற். 71) (ஈ) "வாடுக விறைவநின் கண்ணியொன்னார், நாடுசுடு கமழ்புகை யெறித்த லானே" (உ) "பகைவரூர்சுடு விளக்கத் தழுவிளிக் கம்பலைக், கொள்ளை மேவலை" (ஊ) "பெருந்தண்பணை பாழாக, வேம நன்னா டொள்ளெரி யூட்டினை" (எ) "வினைபுனை நல்லில் வெவ்வெரி யினைப்பக், கனையெரி யுரறிய மருங்கும்" புறநா. 6, 7, 16, 23. 1. உழைமான் சாதியின் ஆண்பால் ஏறெனப்படு மென்பதற்கு, "பொரி மலர்ந் தன்ன பொறிய மடமா, திரிமருப் பேறொடு தேரறற்கோட" என்னும் பகுதி மேற்கோள.் தொல். மரபு. சூ. 38. பே. நச். 2. (அ) "யானை, நீர்மருங் கறியாது தேர்மருங் கோடி, யறுநீ ரம்பியி னெறி முதலுணங்குங்................கடத்திடை" அகம். 29. (ஆ) "அழன்மேய்ந் துண்ட நிழன்மா யியவின், வறன்மரத் தன்ன கவைமருப் பெழிற்கலை யறலவிர்ந் தன்ன தேர்நசைஇ யோடி" அகம். 395. (இ) தேரோட வெஃகிநின் றத்தமாச், சிந்தையா னீரென்று செத்துக்கவர்போடும், பண்பி லருஞ்சுர மென்ப. கைந்நிலை. பாலை. 12. (ஈ) "வெண்டேரை நீராமென் றெண்ணி" ஐந் - ஐம். 36. என்பவைகளும், "நிறைநீர் வேலியு முறைபடக் கிடந்தவிந், நெடும் பேரத்தம்" (சிலப். 11: 69, 70. அடி.) என்புழி, "நிறைநீர் வேலியென்றார், பேய்த்தேரை, நீர்போலத் தோன்றுதலின்" என எழுதியிருத்தலும் "நீரிலெழுத்து நிகழ்கனவும் பேய்த்தேரு, மோரினவை யின்றாமா றொப்பு" என்னும் பகுதியின் விசேடவுரையில் 'அருஞ்சுரத்தின் கண் முதுவேனிலின் நண்பகற் கடுமைபற்றித் தோன்றி ஞாயிற்றின் கிரணம் முகிற்படலத்தின் மறைந்தவழித்தானும் மறைந்துபோவதாகிய பேய்த்தேர், ஒரு காரணங்காட்டி மறைந்து போவதற்கு உவமை' என்று சிவஞானமுனிவர் எழுதியிருத்தலும் (சிவஞானபாடியம், இலக்கணவியல், 6 -ம் சூத்திரம் 1-ம். அதிகரணம், வெண்பா. 1. 'அசத்தறியாய்' பக். 303.) இங்கே அறிதற்பாலன. 3. "மரல்சாய மலைவெம்ப மந்தியுயங்க" என்பது கலியடி பதின்மூன் றெழுத்தான் வந்ததற்கு மேற்கோள் ; தொல். செய்.55. 'அளவடி' இளம.் 4. மலைவெம்பல். கலி. 20: 5, 23: 3, "கல்காயுங் கடுவேனிலொடு" மது. 106. 5. "கயந்தலை மந்தி யுயங்குபசி களைஇயர்" அகம். 288. (பிரதிபேதம்) 1 பொறியமை மடமா, 2 தேரறேர்க்கோடும்.
|