யல்லிசே ராயித ழரக்குத்தோய்ந் தவைபோலக் கல்லுறி னவ்வடி கறுக்குந வல்லவோ எ - து: ஒளியினையுடைத்தாகிய வளையினையுடையாய் ! நீ எம்மோடு வருவையாயின் நின்னுடைய (1) மெல்லிதாகிய இயல்பினையுடைய, அனிச்ச முதலியவற்றிலே பொருந்துதல்வந்த சிறிய அடிகள் ஆண்டுள்ள கல்லைத் தீண்டும் ; அவ் வடிகள் கல்லைத் தீண்டுமாயின், (2) தாமரைப் பூவினது (3) அல்லியைச் சேர்ந்த அழகிய இதழ்கள் (4) இங்குலிகந் தோய்ந்தன போலக் கறுப்பனவல்லவோ ; எ - று.
(ஈ) எல்லே யிலக்க மென்னும் தொல். இடை 21- ஆம் சூத்திரத்துக்கு எல்லென்பது விளங்குதற் பொருண்மை யுணர்த்து மென்று பொருள் கூறி "எல்வளை யெம்மொடு நீவரின்" என்பதை மேற்கோள் காட்டினர். நச். (உ) பிறவுரையாசிரியர்களும் இப்பொருளே கூறி 'எல்வளை' என்பதை மேற்கோள் காட்டினர். அவர்களுள் (ஊ) சேனாவரையர் எல்லென்பது உரிச்சொ னீர் மைத்தாயினும் ஆசிரியர் இடைச் சொல்லாக ஓதினமையான் இடைச்சொல்லென்று கோடுமென்றெழுதி யிருத்தலும் (எ) தெய்வச்சிலையார், இஃதுரிச் சொல்லன்றோ வெனின் அது குறைச்சொல்லாகிநிற்கும். இது குறையின்றி நிற்றலின் இடைச் சொல்லாயிற்றென் றெழுதி யிருத்தலும் ஆராயத்தக்கன. (ஏ) நன். இடை. சூ. 19. இரா. 1. (அ) "மோப்பக் குழையு மனிச்சம்" (ஆ) "அனிச்சமே நின்னினு, மென்னீரள் யாம்வீழ் பவள்" (இ) "அனிச்சமும்............... மாதரடிக்கு நெருஞ்சிப் பழம்" என்னும் குறளும் (ஈ) "அனிச்ச நெருஞ்சி யீன்ற பழமாலென், றஞ்சு மலரடிகள்" சீவக. 341. (உ) "அனித்த மிதிப்பினும் பனித்த லானா, வொளிச்செஞ் சீறடி யுருக்கரக் கேய்ப்ப, வுளித்தலை வெம்பர லூன்றுபு நலிய" பெருங். (1) 53: 162 - 164. என்பவைகளும். ஈண்டு அறிதற்பாலன. பிற்காலத்து நூல்களில் இது கோட்டுப் பூவாகவும் நீர்ப் பூவாகவும் அடிக்கு உவமையாகவும் கூறப்பெற்றுள்ளது. 2. "கல்லதர் நடந்துபூங் கமலம் வாட்டிய, மெல்லடி சிவப்புறல் வீழிவாய் மயிற், கொல்லுமே யெனமன முருகி" நைடதம். கான்புகு. 12. 3. (அ) "பொய்கை போர்க்களம் புறவிதழ் புலவு வாட்படை புல்லித, ழைய கொல்களி றகவித ழரச ரல்லிதன் மக்களா, மையில் கொட்டையம் மன்னனா மலர்ந்த தாமரை" சீவக. 2311; (ஆ) "காதலுள்ளமொடு கலந்துண் டாடுநர், போகச்சேரி புறவித ழாக, .............அருமதியமைச்சர் திருமதிற் சேரி, மாசில் பைந்தாது சுமந்தமத்தகத், தாசி்ல் பன்மல ரல்லி யாக, ............... கோயில் கொட்டை யாகத் தாமரைப், பூவொடு பொலியும் பொலிவிற்றாகி" பெருங். (3) 3; 55 - 109 என்பவற்றால் அல்லி யென்பது கொட்டையைச் சூழ்ந்துள்ள கேசர மென்று தோற்றுகிறது. 4. இங்குலிகம், இக்காலத்துச் சாதிலிங்கமென்றும் இலிங்கமென்றும் வழங்கப் படுகின்றது ; சாதிங்குலிக மென்பது பண்டை வழக்கு.
|