5 | மரல்சாயமலைவெம்ப மந்தி யுயங்க வுரல்போ லடிய வுடம்புயங் கியானை யூறுநீ ரடங்கலி னுண்கயங் காணாது சேறு சுவைத்துத்தஞ் செல்லுயிர் தாங்கும் புயறுளி மாறிய போக்கரு வெஞ்சுரம் ; | 10 | எல்வளையெம்மொடு நீவரின் யாழநின் மெல்லியன் மேவந்தசீறடித் தாமரை யல்லிசே ராயித ழரக்குத்தோய்ந்தவைபோலக் கல்லுறி னவ்வடி கறுக்குந வல்லவோ ; | 14 | நலம்பெறுசுடர்நுதா லெம்மொடு நீவரி னிலங்குமா ணவிர்தூவியன்னமென் சேக்கையுட் டுலங்குமான் மேலூர்தித்துயிலேற்பாய் மற்றாண்டை விலங்குமான் குரல்கேட்பின் வெருவுவை யல்லையோ ; | 18 | கிளிபுரை கிளவியா யெம்மொடு நீவரிற் றளிபொழி தளிரன்ன வெழின்மேனி கவின்வாட முளியரில் பொத்திய முழங்கழ லிடைபோழ்ந்த வளியுறி னவ்வெழில் வாடுவை யல்லையோ ; எனவாங்கு ; | 23 | அனையவை காதலர் கூறலின் வினைவயிற் பிரிகுவ ரெனப்பெரி தழியாதி திரிபுறீஇக் கடுங்குரை யருமைய காடெனி னல்லது கொடுங்குழாய் துறக்குந ரல்லர் நடுங்குதல் காண்மார் நகைகுறித் தனரே. |
இது தலைமகனாற் பிரிவுணர்த்தப்பட்டு ஆற்றாளாய தலைமகள், யான் நும்மோடு போதுவல் என்றாட்கு, தலைவன் அவளது மென்மையுங் காட்டின் கடுமையுங் கூறி உடம்படானாக, ஆற்றாளாய தலைவியைத் தோழி, அவர் நம்மோடு நகையாடிச் சொன்னார் பிரிவரல்லரென வற்புறுத்தியது. இதன் பொருள். செருமிகு சினவேந்தன் சிவந்திறுத்த புலம்போல (1) 1வெரிமேய்ந்த கரிவறல் வாய்குவ காணாவாய்ப்
1. (அ) "நாடுகெட வெரிபரப்பி" (ஆ) "பெருந் தண்பணை, குரூஉக் கொடிய வெரிமேய............பாழாயினநின் பகைவர் தேஎம்" மது. 126, 154 - 176. (பிரதிபேதம்) 1 எரிவெந்த.
|