79

போகாத தலைவி மனைக்கணிருந்து (1) தலைவன் அன்புறுத்தத்தக்கன கூறக் கேட்டுத் தலைவன் தன்மேல் அன்புறுதற்குத் தக்க கருப்பொருளைக் கூறித் தலைவன் செய்வினை முடியாது வருவனென்னும் அச்சம் பிறவாமல் மீண்டு வருவனெனத் துணிந்தே கூறுமென்றலின், 'புனைநலம் வாட்டுநரல்லர்' என வரவு கருதிக் கூறினாள். ஆற்றுவிக்குந்தோழி 'வருவர் கொல்' என ஐயுற்றுக் கூறலாகாமையிற் றோழிகூற்றன்மை உணர்க.

இது சுரிதகம்.

இஃது ஐந்தடித்தரவும் நாலடித்தாழிசையும் அசைநிலையாகிய 1அடை நிலைக்கிளவியும் நான்கடிச் சுரிதகமும் பெற்று வந்த ஒத்தாழிசைக்கலி. (10)

(12). (2)இடுமு ணெடுவேலி போலக் (3) கொலைவர்
கொடுமரந் தேய்த்தார் பதுக்கை நிரைத்த
கடுநவை யாராற் றறுசுனை முற்றி
யுடங்குநீர் வேட்ட (4) வுடம்புயங் கியானை
5கடுந்தாம்பதிபாங்குக் கைதெறப் பட்டு
வெறிநிரை வேறாகச் 2சார்ச்சார லோடி
நெறிமயக் குற்ற நிரம்பாநீ டத்தஞ்

1. பக்கம் 68. குறிப்பு 1. இல் (ஆ) என்பதன்பின் பார்க்க.

2. தலைவன் பிரியக் கருதியவழித் தோழியுந் தலைவியும், நீ போகின்ற விடம் எல்லாவாற்றானும் போதற்கரிய நிலம், எனக்கூறி விலக்குத லுண்டென்பதற்கு, "இடுமுணெடுவேலி...............உரலுடை யுள்ளத்தை" என்பதை மேற்கோள் காட்டி, தலைவியும் தோழியாற் கூற்று நிகழ்த்து மென்பர், நச். தொல். பொருளி. சூ, 22.

3. (அ) "உவலிடு பதுக்கை யாளுகு பறந்தலை" (ஆ) "கொடுவிற் கானவர் கணையிடத் தொலைந்தோர், படுகளத் துயர்த்த மயிர்த்தலைப் பதுக்கை"அகம். 67 : 14. 231:் 5 - 6. (இ) 'கொலைவன்' கலி. 103, 14், 147், 25; புறம். 152: 8. மணி. 25: 174. (ஈ) "கொலைவர் கொடுமரந் தேய்த்தார்" என்பதனை (தொல். வேற். சூ. 9) வினைப்பெயராய்ச் செயப்படு பொருட்கண் காலங்காட்டி நின்றது. என்று கல்லாடரும், செயப்படு பொருட்கட் காலங்காட்டி நின்ற தொழிற்பெயரென்று நச்சினார்க்கினியரும், காலங் காட்டிப் படுத்த லோசையாற் செயப்படு பொருண் மேனின்ற வினைப்பெயர் (இ - வி. சூ. 176) என்று இ - வி. நூலாரும் கூறுவர்.

4. ‘உடம்புயங்கி யானை’ கலி, 13: 6.

(பிரதிபேதம்) 1 இடை நிலைக், 2 சாரச்சாரல்.