எ - து: இங்ஙனம் அவர்க்கு (1) அருள்வந்தவை காட்டுதலின் அவர் வருந்துதற்குக் காரணமான 1நன்மைகளையுடைய காட்டைப்போனவர் நமது புனைந்த நலத்தைக் கெடுக்குமவரல்லர்காண்; அதற்குக் காரணம் என்னெனின், நம்மனையிடத்துப் பல்லியும் நன்றாகிய இடத்தே அவர் வரவுக்குப் பொருந்திக் கூறின ; நல்ல அழகையுடைய மையுண்கண்ணும் இடந்துடியா 2நிற்கும் ; எ - று பல்லி இசைத்தது, பிறிதின்கட் டோன்றிய ஆக்கம் பற்றிய வியப்பு. இடந்துடித்தது, தன்கட் டோன்றிய ஆக்கம்பற்றிய வியப்பு. பல்லியுங்கண்ணுமென்னும் உம்மைகள், எச்சவும்மை. இனைநலமென் பதற்கு இனையநல மென்பது விகாரப்பட்டதென்பாரும் உளர். 3இனைய நலமென்பது பாடமாயின், இத்தன்மையவாய நலமென்க. இப்பாட்டுப் "புணர்ந்துடன் போகிய கிழவோண் மனையிருந், திடைச்சுரத் திறைச்சியும் வினையுஞ் சுட்டி, 4யன்புறு தக்க கிளத்த றானே, கிழவோன் செய்வினைக் கச்ச மாகும்" என்னும் (2) சூத்திரத்துப் புணர்ந்துடன்
சொல்லுஞ்சொல் லாக்கொள்வ தோவுண்டு பண்டுபண்டே" திருவிருத். 48 (அஅ) "நனைசுவர்க் கூரைக் கனைகுரற்பல்லி, பாடு பார்த்திருக்குமெம் மனைவியை" எனப் பல்லி இசைத்தலும். (ஆஆ)"உருவவேற் கண்ணா யொருகாற்றேர்ச் செல்வன், வெருவிவீந் துக்கநீ ளத்தம் - வருவர், சிறந்து பொருடருவான் சேட்சென்றாரின்றே, யிறந்துகண்ணாடு மிடம்" திணைமாலை. 80 (இஇ) "மகிழ்துடி - கையணல், வைத்த வெயிற்றியர் வாட்க ணிடனாட, வுய்த்தன் றுவகை யொருங்கு" பு - வெ. வெட்சி. 12. (ஈஈ) "இருபிறப் பாள னென்கொ லெய்தில னின்னு மென்னா, வரிமிடற்றளிவீ ழோதி மனத்தினி லுணருமேல்வை, முருகுகொப் புளிக்குஞ் செய்ய முளரியம்போது பூத்த, கருநெறிக் குவளையன்ன கண்ணிட னாடிற்றன்ே்ற" பாகவதம், 10: உருக்குமிணி மணத்திறமுரைத்த. 24. (உஉ) "அம்பிகையங் கிடமுலையுங் கண்ணு மாடப், பெருவிருப்பினணித்தாகக் கூட்டுறவுண் டெனப்பிறங்கு மகிழ்ச்சி பூத்தாள்" காஞ்சிப். கழுவாய்ப். 233. என இடந்துடித்தலும் தனித்தனியாயும் கூறப்பட்டிருத்தல் ஈண்டு அறிதற்பாலது. (ஊஊ) "பாங்கர்ப், பகுவாய்ப் பல்லிப் பாடோர்த்துக் குறுகும், புருவைப்பன்றி" (அகம் 88) என்பதும் (எஎ) கலி. 101 : 45. விசேடவுரையின் குறிப்பில் மகளிர்க்கு இடந்துடித்தல் நன்னிமித்த மெனப்படும் பகுதிகளும் ஈண்டு நோக்கத் தக்கன. 1. இனை நல முடையகானஞ் சென்றோர் என்புழி இங்ஙனம் அவர்க்கு அருள்வந்தவை காட்டுதலின் எனப் பெய்துரைத்த சொற்றொடர். கலி. 3 : 20 இல.் உள்ளது. 2. தொல். கற்பியல் சூ. 7. (பிரதிபேதம்) 1 நன்மைகளுடைய, 2 நிற்குமென்றாளென்க, 3 இனநலம், 4 அன்புறுத் தகலங்கிளத்தல்.
|