| (1) | சிறுநனிநீதுஞ்சி (2) யேற்பினு மஞ்சு நறுநுத னீத்துப்பொருள்வயிற் செல்வோ யுரனுடை யுள்ளத்தை செய்பொருண் முற்றிய | (10). | (3) | வளமையா னாகும் பொருளிது வென்பா யிளமையுங் காமமு நின்பாணி நில்லா விடைமுலைக் (4)கோதை குழைய முயங்கு முறைநாள் கழிதலுறாஅமைக் காண்டை | (15). | (5) | கடைநாளிதுவென் றறிந்தாரு மில்லைப். | | (6) | போற்றாய் பெருமநீகாமம் புகர்பட வேற்றுமைக் கொண்டு பொருள்வயிற் போகுவாய் கூற்றமுமூப்பு மறந்தாரோ டோராஅங்கு மாற்றுமைக்கொண்ட வழி |
இது தலைமகனாற் பிரிவுணர்த்தப்பட்ட தோழி காட்டது கடுமையுந் தலைவியது மென்மையும் "நாளது சின்மையு மிளமைய தருமையுந்,
1. ‘சிறுநனி நீதுஞ்சி யேற்பினும்’ என்பது (தொல். வினை. சூ. 30 கல். தொல். வினை. சூ. 31. நச்.) குறிப்பு வினையெச்சம் அகர வீற்றானன்றி வேறீற்றான் முடிக்குஞ் சொல்லை விசேடித்து வருவதற்கு மேற்கோள். 2. ஏற்றலென்னுஞ் சொல்லின் பொருள் (அ) "வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட வேற்றெழுந், தமளி தைவந் தனனே" (ஆ) "மெய்யுணர்ந் தேற்றெழுவே னாயின்" (இ) "எழுவார்யாழு மேத்தொலியு மிறைவன்கேளாத் துயிலேற்றான்" (ஈ) "செங்க, ணேற்றெழுந் தன்னால்" (உ) “பூணாக மெல்லியற் புல்லினையாகவப் பொய்யை மெய்யாப், பேணாமகிழ்ந்து பெருந்துயி லேற்றவள் பின்னைநின்னைக,் காணாள்கலங்கினள்" என்பவற்றால் தெளியலாம். 3. (அ) "வளமையோ வைகலுஞ் செயலாகும்....................இளமையுந் தருவதோ விறந்தபின்னே" (ஆ) “இளமையுங் காமமு மோராங்குப் பெற்றார், வளமை விழைதக்க துண்டோ.....................அரிதரோ, சென்ற விளமை தரற்கு" கலி. 15; 24 - 6, 18 : 7 - 12 என்பவைகளும் அவற்றின் குறிப்பில் இவ்விடத்துக்குப் பொருந்து வனவும் காண்க. 4. கலி. 73 -ம் செய்யுளின் 12 - 3. அடிகளின் குறிப்புப் பார்க்க. 5. "இதுவென வரைந்து வாழுநா ளுணர்ந்தோர், முதுநீ ருலகின் முழுவதுமில்லை" சிலப்.28, 181 - 2. 6. "மாற்றுமைக் கொண்டவழி" என்பது இறுதிக்கண் இரண்டாவது தொக்கதென்றும் அது போற்றாயெனவரு முடிக்குஞ் சொல்லோடு ஒட்டி ஒரு சொல்லாகாமை யுணர்கவென்றுங் கூறுவர், நச். தொல். எச்ச. சூ. 16.
|