77

(1) பல்லியும் பாங்கொத் திசைத்தன
நல்லெழி லுண்கணு மாடுமா லிடனே


1. (அ) "இடங்க ணினி........................ம படூஉ, நெடுஞ்சுவர்ப் பல்லியும் பாங்கிற் றேற்றும்...............சுரம்பல நீந்திச், செய் பொருட் ககன்றன ராயினும் பொய்யலர், வருவர் வாழி தோழி" நற்றினை. 246. (ஆ) "பூங்கணிட மாடுங் கனவுந் திருந்தின, வோங்கிய குன்ற மிறந்தாரை யாநினைப்ப, வீங்கிய மென்றோள் கவினிப் பிணிதீரப், பாங்கத்துப் பல்லிபடும்." ஐந்-எழு. 41. (இ) "எல்லிருட் கனவிற் கண்டேன் கண்ணிட னாடு மின்னே, பல்லியும் பட்ட பாங்கர் வருங்கொலோ நம்பியென்று, சொல்லின டேவிநிற்பப் பதுமுகன் றொழுது சேர்ந்து, நல்லடி பணிந்து நம்பி வந்தன னடிக ளென்றான்" சீவக. 1909. (ஈ) "அரவிசைக் குந்திரு வல்குனல் லாயடை யார்மடியப், பொரவிசைக் கும்பரி பூண்டபொற் றேர்நம் புரவலர்தம் வரவிசைக், கும்பல்லி வாமந் துடிக்கும் வரிநெடுங்க, ணிரவிசைக் குங்குழ லோடிள வாடையின்றென் செய்யுமே" அம்பிகா. 535 (உ) "துடித்தன வெனக்கிடந் தோளுங் கொங்கையும், வடித்த வேல்விழியுநல் வரைப்பிற் பல்லியு, நொடித்தன விரிச்சியு நுவலப்பட்டன, கடைத்தலைக் குமரநிற் காண்டற் கென்றனள்" .................எனப்பல்லி யிசைத்தலும் இடந்துடித்தலும் சேர்த்தும். (ஊ) "அரும்பொருட் ககன்ற காதலர் முயக்கெதிர்ந்து, திருந்திழைப் பணைத்தோள் பெறுநர் போலு, நீங்குக மாதோநின் னவல மோங்குமிசை, யுயர்புகழ் நல்லி லொண்சுவர்ப் பொருந்த,ி நயவரு குரல பல்லி, நள்ளென் யாமத் துள்ளுதொறும் படுமே" நற். 333. (எ) "ஓங்கிய நல்லி லொரு சிறை நிலைஇப், பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவி" அகம். 9: (ஏ) "கள்ளி முள்ளரைப் பொருந்திச் செல்லுநர்க், குறுவது கூறுஞ் சிறுசெந் நாவின், மணியோர்த்தன்ன தெண்குரற், கணிவாய்ப் பல்லிய காடிறந்தோரே" அகம். 151: 12 - 5. (ஐ) "பகுவாய்ப் பல்லி படுதொறும் பரவி, நல்ல கூறென நடுங்கிப், புல்லென்மாலையொடு பொருங்கொ றானோ " அகம், 289: 15- 7 (ஒ) "வருந்து தோட் பூசல் களையு மருந்தென, வுள்ளுதொறு படூஉம் பல்லி, புள்ளுத்தொழு துறைவி செவிமுதலானே" அகம். 351 (ஓ) "ஆமா சிலைக்கு மணிவரை யாரிடை, யேமாண் சிலையார்க் கினமா விரிந்தோடுந், தாமாண்பில் வெஞ்சுரஞ் சென்றார் வரல் கூறும், வாய்மாண்டபல்லி படும்" கைந்நிலை. 18. (ஒள) "கொட்டாய் பல்லிக்குட்டி - குடமாடி யுலகளந்த, மட்டார் பூங்குழன் மாதவனை வரக் - கொட்டாய் பல்லிக்குட்டி" பெரியதிருமொழி. 10 - 10: 4. (ஃ) "பல்லியின்