(14). | கன்மிசை (1) வேய்வாடக் (2) கனைகதிர் தெறுதலாற் றுன்னரூஉந் தகையவே காடென்றா ரக்காட்டு ளின் (3) னிழ லின்மையான் வருந்திய மடப் (4) பிணைக்குத் தன்னிழலைக் கொடுத்தளிக்குங் கலையெனவு முரைத்தனரே |
எ - து: காடுகள் ஞாயிற்றினுடைய செறிந்தகதிர்கள் மலையின்மே னின்ற மூங்கில்கள் வாடும்படி சுடுதலாலே செல்வார்க்குச் சேருதலரிய தகைமையினை யுடையவாயே இருக்குமென்று சொன்னார் ; சொல்லி, அக்காட்டிடத்தே 1கலைமான், இனிய நிழலில்லாதபடியாலே வருந்திய மடப்பத்தையுடைய 2தன் பிணைக்குத் தான் நின்று தன் நிழலைக்கொடுத்து உயிரை அளியா நிற்குமென்றுஞ் சொன்னார் ; எ- று. இவை மூன்றும், தாழிசை. எனவாங்கு, அசை. இது தனிச்சொல். (19). | இனைநல முடைய (5) கானஞ் சென்றோர் புனைநலம் வாட்டுந ரல்லர் மனைவயிற் |
1. (அ) "மழைபெயன் மாறிய கழைதிரங் கத்தம்" (ஆ) "இரும்பணை திரங்கப் பெரும்பெய லொளிப்பக், குன்றுவறங் கூரச் சுடர்சினந் திகழ, வருவி யற்ற பெருவறற் காலையும்" பதிற். 41: 14, 43: 12 - 4. (இ) "கழைகாய்ந் துலறிய வறங்கூர் நீளிடை" புறம். 370. 2. (அ) "கனைகதிர் தெறுதலிற்" கலி. 150, 3. (ஆ) "கனைகதிர்க் கனலியை" கலி. 16: 12. என்பவையும். (இ) "கனைசுடர்" கலி. 120. என்பதன் குறிப்பும் பார்க்க. 3. "ஆடு கின்றசிறை வெம்ப ருந்தினிழ லஞ்சி யக்கடு வனத்தைவிட், டோடு கின்ற நிழ லொக்கு நிற்குநிழ லோரி டத்துமுள வல்லவே.” கலிங். 67. 4. (அ) "கலையின்பிணை கன்றிடு மென்றுகசிந,் திலையின்னிழ லவ்வயி னின்மையினா, னிலையின்னிழ றானது நின்று கொடுத், துலையும் வெயி னின்றுருகும் முரவோய்." சீவக. 1188. (ஆ) "பண்ணார் பணிமொழிப் பைந்தொடி யாய்வெந்த பாலைவன, மெண்ணா திருநிதிக் கேகினர் காண்ப ரெதிர்ந்தவலின், கண்ணார் சிறுபுனல் மெய்யுறும் வேட்கை கரந்துகலை, யுண்ணா தரிணத்தை யுண்டதுபோல நின் றூட்டுவதே" அம்பிகா. 312. 5. "தகையெழில் வாட்டுந ரல்லர், முகையவிழ் புறவி னாடிறந் தோரே" ஐங். 462. (பிரதிபேதம்) 1 கலைகள், 2 தம்பிணைக்குத் தாநின்றும் தந்நிழலை.
|