எ-து: பொன்னாற் செய்த கனவிய குழையினையுடையாய், காடுகள் (1) நெருப்புப்போன்ற வெம்மையாலே அடிபொறுக்கும் அளவின்றிக்கடியவாயிருக்குமென்று சொன்னார்; சொல்லி, 1அக்காட்டகத்தே களிறு, துடிபோலும் அடியையுடைய யானைக்கன்றுகள் இழிந்து, தாயுந்தந்தையும் உண்ணவேண்டுமென்று கருதாது கலக்கிய சிறிய நீரை முதற் பிடியை ஊட்டிப் பின்பு தானும் உண்ணுமென்றுஞ் சொன்னார்; எ-று. (10). | இன்பத்தி னிகந்தொரீஇ யிலைதீந்த வுலவையாற் றுன் (2) புறூஉந் தகையவே காடென்றா ரக்காட்டு ளன்புகொண் மடப் (3) பெடை யசைஇய வருத்தத்தை மென்சிறக ராலாற்றும் புறவெனவு முரைத்தனரே |
எ - து: காடுகள் இலை பசுமை இகந்து தீந்தகொம்புகளாலே இன்பத்தினின்று நீங்கி, சென்றாரைத் துன்பமுறுத்துந் தகைமையையுடையவாயே இருக்குமென்று சொன்னார்; சொல்லி, அக்காட்டிடத்தே புறவுகள், தாம் அன்புகொண்ட மடப்பத்தையுடைய பெடைகள் வெம்மையால் இளைத்த வருத்தத்தைத் தஞ் சிறகை விரித்து அதன் நிழலாலே அவ்வெம்மையைத் தீர்க்கு மென்றுஞ் சொன்னார்; எ- று. சிறகர் : அர், ஈற்றுப்போலி.
(தொல். செய். சூ. 2.) மேற்கோள் காட்டி, குற்றெழுத்து இடையினின்ற வொற்றெழுத்தை மாத்திரை மிகுத்து விராஅய் நின்றவாறு காண்கவென்றும் கூறுவர், நச்சினார்க்கினியர். 1. "செல்பவோ தம்மடைந்தார் சீரழிய................கீழா, லடிவெந்து கண் சுடுமாறு" திணைமாலை. 92. 2. உறுவென்பது உறுத்தென்னும் பொருளில் வருதலை (அ) செவியறிவுறூ வென்பதன் பொருளாலும் (ஆ) "வளிசுழற்றுறாஅ" என்புழி (அகம். 39) உறாஅ வென்பதற்கு உறுத்தி யெனப் பொருளெழுதி இருத்தலாலும் (இ) "நீப்பிடந் தோறும் யாப்புற வறிவுறீஇ" (ஈ) "குளம்புங் கோடும் விளங்குபொன் னுறீஇ" என்னும் பெருங்கதையாலும் உணர்க. 3. (அ) "கெழுவிப் பெடையைக் கிளர்சேவ றழீஇத், தொழுதிச் சிறகிற் றுயராற்றுவன" சீவக. 1187. (ஆ) "தேர்த்தானை வாணன் றென் மாறைமின்னேயஞ்சல் செம்புருக்கி வார்த்தாலனைய வழி நெடும் பாலை மடப் பெடை நோய், பார்த்தாத வந்தணி பாதவ மின்மையிற் பைஞ்சிறகாற், போர்த்தாலு மஞ்ஞைகண் டும்போவ ரோநம் புலவலரே" தஞ்சை. 267. (பிரதிபேதம்) 1 சொல்லிய காட்டிடத்தே (தாழிசை மூன்றனுரையிலும்).
|