(1)பிடியூட்டிப் பின்னுண்ணுங்ங் களிறெனவு முரைத்தனரே
1. (அ) "மடப்பிடி யுயங்குபசி களைஇயர், பெருங்களிறு தொலைத்த முடத்தாளோமை" (ஆ) "இரும்பிணர்த்தடக்கை நீட்டி நீர்நொண்டு, பெருங்கை யானை பிடியெதி ரோடுங், கானம் வெம்பிய வறங்கூர் கடத்திடை" (இ) "மடப்பிடி தழீஇய தடக்கை வேழந், தேன்செய் பெருங்கிளை யிரிய வேங்கைப், பொன்புரை கவழம் புறந்தருபூட்டு, மாமலை" (ஈ) "நசைபெரி துடையர் நல்கலு நல்குவர், பிடிபசி களைஇய பெருங்கைவேழ, மென்சினை யாஅம் பிளக்கு, மன்பின தோழியவர் சென்ற வாறே" (உ) "மறந்தனர் கொல்லோ தாமே களிறுதன், னுயங்குநடை மடப்பிடி வருத்த நோனாது, நிலையுயர் யாஅத் துலையக் குத்தி, வெண்ணார் கொண்டு கைசுவைத் தண்ணாந், தழுங்க னெஞ்ச மொடு முழங்கு, மத்த நீளிடை யழப்பிரிந் தோரே." (ஊ) "தொடு குழி மருங்கிற் றுவ்வாக் கலங்கல், கன்றுடை மடப்பிடிக் கயந்தலை மண்ணிச், சேறுகொண் டாடிய வேறுபடு வயக்களிறு" (எ) "யானை தன், கொன்மருப் பொடியக் குத்திச் சினஞ்சிறந், தின்னாவேனி லின்றுணை யார, முளிசினை மராஅத்துப் பொளிபிளந் தூட்ட" (ஏ) "வீழ்பிடி கெடுத்த வெண்கோட் டியானை, யுண்குளகு மறுத்தவுயக்கத் தன்ன" (ஐ) "செந்தினை கவர்ந்த பைங்கண் வேழங், கருவரைப் பிரசங் கை யின் வாங்கி, யீயின மிரிய வீசி வயவுப்பிடியின், வாயுறக் கொடுத்த செவ்விநோக்கி" (ஒ) "விலக்கல் விளங்கிழாஅய் செல்வாரோ வல்ல, ரழற்பட் டசைந்த பிடியை - யெழிற்களிறு, கற்சுனைச் சேற்றிடைச் சின்னீரைக் கையாற்கொண், டுச்சி யொழுக்குஞ் சுரம்" (ஓ) "குழவிப்பிடி குஞ்சர மாழ்குமெனத் தழுவிச்சுடு வெவ்வழ றாங்குவன" (ஒள) “உழையுடைக் கற்பின ருரையிற் சென்றிடா, தழை யுடைப் பிடிக்குநீர் தணிக்கும் வேட்கையாற், புழையுடைத்தனிக்கரம் போக்கிப் பொங்குசூன், மழையுடைத் திடுவன மதங்கொள்யானையே" (ஃ) "உருகு காதலிற் றழைகொண்டு மழலைவண் டோச்சி, முருகு நாறு செந் தேனினை முழைநின்றும் வாங்கிப், பெருகு சூலிளம் பிடிக்கொரு பிறைமருப் பியானை, பருக வாயினிற் கையினின் றளிப்பது பாராய்" (அஅ) "ஒருத்தற் குலம்பிடிக் கூண்பல வூட்டியுண் டோங்குநிழற், பொருத்தற் குகைப்பது நின்னகநாடு" என்பவை, களிற்றுக்குப் பிடியின்பா லன்புமிகுதியென்பவற்றை விளக்கும். (ஆஆ)"தானுமுண்ணும் விருந்துண்டு மிகினே" என்பதை இவ்வடி நினைப்பிக்கின்றது. ஆசிரியமாலை. ”சிறுசெவியன்னே" (இஇ) "பிடியூட்டிப் பின்னுண்ணுங்ங் களிறெனவு முரைத்தனரே" என்பதனை ஒற்றிசை நீடலுக்கு (தொல். நூன்மரபு. சூ. 33) மேற்கோள்காட்டி, ஙகர வொற்று அளபிறந்தவாறு காண்க வென்றும் (ஈஈ) மாத்திரை யளவு மெழுத்தியல் வகையு, மேற்கிளந்தன்னவென்
|