73

(1)டுடியடிக் (2) கயந்தலை (3) கலக்கிய (4) சின்னீரைப்


வழங்கப்படுமென்பதற்கு "அடிதாங்கு............களிறெனவு முரைத்தனரே" என்பது மேற்கோள். (தொல். செய். சூ. 88. 'அஃதொழித்' இளம்) ("தொடைபல தொடுப்பினுந் தளைபலவிரவினு முதல்வந்ததனான் மொழிந்திசிற் பெயரே"  என்னும் யா - வி, சூ. 53. இங்கு ஓர்க்கத்தக்கது.) (ஆ) இளம்பூரணர். ‘அன்புறுதகுந’ என்னும் தொல். பொருளி. 35-ம் சூத்திரவுரையில் அன்புறுதற்குத் தகுவன இறைச்சிப் பொருட்கட் சுட்டுதலும் வற்புறுத்தலாமென்று கூறி இதனை மேற்கோள்காட்டி இது வற்புறுத்தற் குறிப்பென்பர். (இ) "அடிதாங்கு மளவன்றி யழலன்ன வெம்மையானென்பது வெண்சீர்கள் பகைத்து வந்து ஈற்றுச் சீரின் முதற்கணின்ற நேரசை நிரையசைபோலக் கலியோசை கொண்டமையின் அது கலித்தளை யெனப்பட்டது" என்பர், பே. (ஈ) நச்சினார்க்கினியரும் இதனையே இறுதியிற்சிறிதுமாற்றி 'துள்ளலோசை கோடலிற் கலித்தளையாயிற்று' என்றும் "இது கட்டளையடிக்கே யென்பது 'தளைவகை சிதையாத் தன்மையான' (செய். 28.) என நின்ற அதிகாரத்தாற் கொள்க" என்றும் கூறுவர். தொல். செய். சூ. 29. (உ) இளம்பூரணர,் கலிப்பாவின் அடி பதின்மூன்றெழுத்து முதலாக இருபதெழுத்து ஈறாக வருமென்றுகூறி, இதனைப் பதினைந்தெழுத்தான் வந்தவடிக்கு மேற்கோள் காட்டுவர். தொல். செய். சூ. 55. 'அளவடி'

1. (அ) "துடியடியன்ன தூங்குநடைக் குழவியொடு" பொருந. 125; (ஆ) "துடியடிக் குழவிய" புறம். 369: 26; 
(இ) "துடியடியன மடிசெவியன துறுகய முனி" பெரிய. கண்ணப்ப. 86; (ஈ) "கொடியகுர லுடையவிடை கடியதுடி யடியினொடு மிடியினதிர" தே.

2. "கயந்தலைக் குழவி" நற். 171; குறுந். 394. 

3. 'கலக்கிய சின்னீரை' என்பதனொடு "கலங்குநீ ரென்பதற்கு, சின்னீரெனப் பொருளெழுதி யிருத்தலும்" சீவக. 2381. 
"தேறுபடு சின்னீர்போலத் தெளிந்து" மணி. 23; 142. என்பதும் ஒப்பு நோக்கற்பாலன.

4. (அ) "சேலேறு சின்னீரிடைச் செல்வனபோன்று" (ஆ) "சின்னீர் மாக்கய லெதிர்ந்தவேபோல்" சீவக. 2344, 2540.  (இ) "வேலைச் சின்னீர் பருகின னிரவி" (ஈ) "யாற்றுநீர் சிலவென்று மருவான்" கம்ப. கும்ப. 39; இரணிய. 4. என்பவைகளும், (உ) நச்சினார்க்கினியர். கலி. 34-இல் சின்னீரென்பதற்கும் 72-இல் பால் சிலவென்பதற்கும் எழுதிய குறிப்புக்களும் தொல். கிளவி. சூ: 17. உரையில் குடத்துள்ளும் பிறகலத்துள்ளும் இருந்த நீரைச் சிறிதென்னாது சிலவென்றலும்..................போல்வன வழக்காம் என்று எழுதியிருப்பதும் ஈண்டு அறியத்தக்கன.