(1) பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும் எ - து: பெரிதாய 1பகையை யெல்லாம் வென்று அச்செருக்கினால், தம்மை வழிபடாதாரை அழித்தலும் ; எ - று.
மூன்றன்பகுதி கூறியதற்கு மேற்கோள்காட்டி இதனுள் என வென்றதனால், தலைவன் கூற்றுப்பெற்றாமென்பர், நச். தொல். அகத். சூ. 41. (இ) "அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும்" என்பதனை இளம்பூரணர் அருளலென்பதற்கு எல்லாவுயிர்க்கும் அருள்செய்த லென்று பொருள்கூறி அதற்கும், (தொல். மெய்ப். சூ. 12); (ஈ) பேராசிரியர் அச்சொல்லுக்கு மக்கண் முதலிய சுற்றத்தாரை யருளுதலென்று பொருள் கூறி அதற்கும், (தொல்.மெய்ப். சூ. 12); (உ) ஆசிரியவுரிச்சீர் கலித்தளை மருங்கிற் கடியவும் படாஅ எனக்கூறிய இடத்து வெண்சீர் வருகவெனல் வேண்டாவோ வென்று வினாவி வெண்பாவிற்கு வெண்சீர் வருமென விதந்தோதான். அதுபோல அதனியற்றாகிய கலிப்பாவிற்கும் வெண்சீர்வருமென விதந்தோதல் வேண்டுவ தன்றென்று விடுத்துக் கலிப்பாவில் வெண்சீர் வந்ததற்கும், (ஊ) வெண்சீ ரிறுதி நிரையொடுதட்ட கலித்தளைக்கும், (எ) அடியென்று சிறப்பித்துச் சொல்லப்படுவது நாற்சீரடி யென்றும் அது ஆசிரியப்பா வெண்பாக் கலிப்பாவென்னு மூன்று பாவினும் வருமென்றுங் கூறிக் கலிப்பாவில் வந்ததற்கும் ; (ஏ) அளவடிக்கட் டுள்ளலோசை வந்ததற்கும், (தொல். செய். சூ. 24, 29, 32, 115.;) (ஐ) நச்சினார்க்கினியர் "வெண்சீ ரிறுதி நிரை முதலியற்சீர் தட்டலிற் றுள்ளலோசை சிறவாதாயிற்று" என்பதற்கும், (ஒ) கலிப்பாவில் அளவடி வந்ததற்கும், (ஓ) புலவன் தான்வைப்பக்கருதிய பொருளைப் பிறிதோரடியுங்கொண்டு கூட்டாதுமுடிய நாட்டலாகிய யாப்பென்னுமுறுப்புக் கலியில் வந்ததற்கும், (ஒள) முற்றுமோனைக்கும், (தொல். செய். சூ. 29, 32, 78, 92.) (ஃ) இ - வி. நூலார் அருளலென்பதற்கு மக்கள் முதலிய சுற்றத்தாரை அருளுதலென்றுபொருள்கூறி அதற்கும்மேற்கோள் காட்டினர். 1. (அ) "செறுவோர்செம்மல் வாட்டலுஞ் சேர்ந்தோர்க், குறுமிடத்துவக்கு முதவி யாண்மையு, மில்லிருந் தமைவோர்க் கில்லென்றெண்ணி,,,,,,,,,,,வெஞ்சுர மிறந்தனர்." அகம். 231. (ஆ) "நண்ணார்த் தெறுதலுந், தற்செய்வான் சென்றார்த்தரூஉம்" கார். 7. (இ) "செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கு, மெஃகதனிற் கூரியதில்" குறள். 759. (ஈ) "செய்க பொருள் யாருஞ்செறு வாரைச் செறுகிற்கு, மெஃகு பிறி தில்லை" (உ) "பொன்னினாகும் பொருபடை யப்படை, தன்னி னாகுந் தரணி" சீவக. 497. 1923. (ஊ) "கருதலர் தம்மை வாட்டுங், கூரிய திதன்மேலில்லை கொழும்பொனீர் கொண்மி னென்றார்" உத்தா. அசுவமேத. 163. (பிரதிபேதம்) 1 பகைகளை.
|