(14). | கன்மிசை வேய்வாடக் கனைகதிர் தெறுதலாற் றுன்னரூஉந் தகையவே காடென்றா ரக்காட்டு ளின்னிழ லின்மையான் வருந்திய மடப்பிணைக்குத் தன்னிழலைக் கொடுத்தளிக்குங் கலையெனவு முரைத்தனரே ; எனவாங்கு ; | 19. | இனைநல முடைய கானஞ் சென்றோர் புனைநலம் வாட்டுந ரல்லர் மனைவயிற் பல்லியும் பாங்கொத் திசைத்தன நல்லெழி லுண்கணு மாடுமா லிடனே. |
இது (1) தலைவி, மூன்றன்பகுதி தலைவன்கூறிப் பொருள்வயிற் பிரிகின்ற காலத்துக் காடு கடியவாயினும் இவ்வகைப்பட்டனவும் 1உளவென்று கூறினார், அவை காண்டலின் வருவரெனத் தோழிக்குக் கூறி அதற்கு நிமித்தமுங்கூறி ஆற்றுவித்தது. மூன்றன்பகுதி கூறுதலாவது அறத்தினாற் பொருளாக்கி அப்பொருளாற் காமம் நுகர்வேனென்றலாம். உடைமையது உயர்ச்சி கூறிப் பிரிந்தானெனக் கிளவி கூறிற் பொருள்வயிற் பிரிதலின்றும், அது பொருள்வயிற் பிரிவை விலக்குமென்றலின். இதன்பொருள். (2) அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும் எ - து; தம்மை அருள்பண்ணிவந்த அந்தணர்தாபதர் முதலியோருக்குப் பெறுதற்கரிதாய அறஞ்செய்தலைப் பொருந்தி வேண்டுவன கொடுத்தலும் ; எ - று. இஃது அருளென்னும் மெய்ப்பாடு.
யா - வி. சூ. 27. இலும் (ஓ) இ - வி. உரைகாரர் இ - வி. சூ. 721. இலும் கலிப்பா அளவடியான் வந்ததற்கு மேற்கோள்காட்டுவர். 1. "அரிதாய வறனெய்தி யென்றது மூன்றன்பகுதி தலைவன்கூறக் கேட்ட தலைவி கூறியது" தொல். அகத். சூ. 44. நச். 2. "துள்ளலோசை கலிப்பாவிற்கு ஆம் ; துள்ளுதலாவது ஒழுகு நடைத்தன்றி இடையிடை உயர்ந்து வருதல் ; கன்று துள்ளிற்றென்றாற் போலக் கொள்கவென விளக்கி, ‘அரிதாய..........................கேளினி’ என்னும் பகுதியை மேற்கோள் காட்டி, அரிதாய என நின்றவழிச் செப்பலோசைத் தாகிய வெண்சீர் பின்னும் வெண்டளைக் கேற்ற சொல்லொடு புணராது ஆண்டெழுந்த வோசை துள்ளி வந்தமையால் துள்ளலோசை யாயிற்று" என்பர். இளம். தொல். செய். சூ. 78. துள்ளலோசை’ (ஆ) "அரிதாய.................கேளினி" என்பதனைத் தலைவன் (பிரதிபேதம்) 1 உளவெனவுங்.
|