(11). | (1) அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும் பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும் புரிவமர் காதலிற் புணர்ச்சியுந் தருமெனப் பிரிவெண்ணிப் பொருள்வயிற் சென்றநங் காதலர் வருவர்கொல் வயங்கிழாஅய் வலிப்பல்யான் கேஎளினி ; | 6. | அடிதாங்குமளவின்றி யழலன்ன வெம்மையாற் கடியவே கனங்குழாஅய் காடென்றா ரக்காட்டுட் டுடியடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப் பிடியூட்டிப் பின்னுண்ணுங்ங் களிறெனவு முரைத்தனரே ; | 10. | இன்பத்தினிகந்தொரீஇ யிலைதீந்த வுலவையாற் றுன்புறூஉந் தகையவே காடென்றா ரக்காட்டு ளன்புகொண் மடப்பெடை யசைஇய வருத்தத்தை மென்சிறக ராலாற்றும் புறவெனவு முரைத்தனரே |
1. (அ) "தலைவரும் விழுமநிலை" என்னுஞ் சூத்திரத்து ‘ஒழிந்தது கூறி’ என்பதை மொழிந்ததுகூறி யெனப் பாடங்கொண்டு, ‘மொழிந்ததுகூறிவன்புறை நெருங்குதலாவது தலைமகன்மொழிந்தது கூறி வற்புறுத்தல்’ என்று பொருளெழுதி இச்செய்யுளை மேற்கோள் காட்டித் தோழி "அரிதாய...................கலையெனவு முரைத்தனரே" என அவன் மொழிந்ததுகூறி, "என வாங்கு, இனைநல........லிடனே" என வற்புறுத்தியவாறு கண்டுகொள்க வென்பர், இளம். தொல். அகத். சூ. 42. (உரையாசிரியர் பலர் இக்கருத்தினர் பக்கம், 71. 3 பார்க்க). (ஆ) நச்சினார்க்கினியர் "அரிதாய வறனெய்தி யென்னுங் கலிப்பாட்டு, தலைவன் அன்புறுதக்கன கூறக்கேட்ட தலைவி அவற்றைக் கூறிப் புனைநலம் வாட்டுநரல்லரென வரவுகருதிக் கூறியவாறு காண்க; இதனுள் ஆற்றுவிக்குந் தோழி வருவர்கொலென ஐயுற்றுக் கூறலின்மையிற் றோழிகூற்றன்மையு முணர்க" (தொல். கற். சூ. 7.) என்றும் (இ) "அரிதாய வறனென்பது தோழி கூற்றன்மையுணர்க" (தொல். பொருளி. சூ. 37.) என்றும் இளம்பூரணர் கருத்தினை மறுப்பர். அன்றியும் இவர் (ஈ) இச்செய்யுளைத் தலைவன் சொல்லிப் பிரிதற்கும் (தொல். கற். சூ. 43.), (உ) கலியிறுதி யாசிரியம் ஈற்றடி நாற்சீரும் அயலடிமுச்சீருமாக எழுசீரான் இற்றதற்கும் (தொல். செய். சூ. 76.), (ஊ) கலியுறுப்பாகவந்த செய்யுளுக்கும் (தொல். செய் சூ. 105) மேற்கோள் காட்டுவர். (எ) பேராசிரியர் கலிப்பா அளவடியான் வந்ததற்கும.் (ஏ) ஈற்றயல் முச்சீரடி யாசிரியம்வந்த கலிப்பாவிற்கும் (ஐ) கலிப்பா வுறுப்புவந்த செய்யுளுக்கும் (தொல். செய். சூ. 35, 76, 105.) மேற்கோள் காட்டுவர். (ஒ) யா - வி, உரைகாரர்
|