66

எ - து: 1பலவும்படுத்தல் பொருந்திய படுக்கையிடத்தே துயிலிடத்து நீ அவள் வருத்தம் அறியாயாய் அவள் முயங்கிய கையை விட்டு நீங்குவாயாயினுந் தனிமைகொண்டு வருந்துமவள் கூட்டத்திற்கு இடையே பிரிதலை மனத்தேகொண்டு வேற்றுநாட்டிடத்தே நிலைநில்லாத பொருளினிடத்தே நீ போவையென்று யான்கூறக்கேட்பின் நெஞ்சு அழிந்துகெட்டுப்போக மிகவும் ஒளிகெடுவாளோ? இறந்துபடுவாளே; எ - று.

இனைபவள் ஒளியோடற் 2பாளோவென்க.

3பலபடையாவன: (1) "சிறுபூளைசெம்பஞ்சு வெண்பஞ்சு சேண, முறுதூவி தாமிவையோ ரைந்து," என்பனவாம்.

4ஓடற்பாள் முற்றுவினைத்திரிசொல். அறியாய், வினையெச்ச முற்று ஓகாரம், எதிர்மறை.

(12). (2) முனிவின்றி முயல்பொருட் கிறத்திநீ யெனக்கேட்பிற்
பனியகண் படலொல்லா படர்கூர்கிற் பாண்மன்னோ
நனிகொண்ட சாயலா ணயந்துநீ (3) நகையாகத்
துனிசெய்து நீடினுந் துறப்பஞ்சிக் கலுழ்பவள்

எ - து: மிகுதியைக் கொண்ட மென்மையையுடையவள் நீ ஓர் விளையாட்டை விரும்பி விளையாட்டாக ஒரு நீக்கத்தைச்செய்து அதிலே சிறிது


(ஆ) "மடவைகா ணன்னெஞ்சே மாண்பொருண்மாட் டோடப், புடைபெயர் போழ்தத்து மாற்றாள் - படர்கூர்ந்து, விம்மி யுயிர்க்கும் விளங்கிழையா ளாற்றுமோ, நம்மிற் பிரிந்த விடத்து" ஐந் - ஐம். 39. (இ) "தெளித்தபூம் பள்ளியிற் சிறிது நீங்கினு, மளப்பருந் துயரொடு மவல மெய்துவேன்" நைடதம். பிரிவுறு. 12.

1. "சிறுபூளை...............முறுதூவி சேக்கை யோரைந்து" என்பது சீவக. 838. மேற்கோளிற்காணப்படும் பாடபேதம்.

2. (அ) "முனியாதார் முன்னிய செய்யுந்திரு" நான். 40. (ஆ) "தனியேம்யா மென்றொருவர் தாமடியல் வேண்டா,
முனிவில ராகி முயல்க முனியாதார், முன்னிய தெய்தாமை யில்" பழ. 161. (இ) துஞ்சலென்பது உறக்கம்; அதுவும் உறங்காமை போலாமையின் மெய்ப்பாடாயிற்று; "முனிவின்றி (............................................ கண்படலொல்லா படர்கூர்கிற் பாண்மன்னோ") எனவரும். என்பர் இளம்பூரணர்; தொல். மெய்ப். சூ. 12.

3. "நடுங்குதல் காண்மார் நகை குறித்தனரே" கலி. 13.

(பிரதிபேதம்) 1 பதம்படுத்தல், 2 பாலளோ, 3 படையாவன, 4 ஒளியோடற்பாள்.