கொலையஞ்சா வினைவராற் கோல் 1கோடி யவனிழ லுலகுபோ லுலறிய வுயர்மர வெஞ்சுரம் எ - து; பிரமசரியங் காத்தலான் இளமைப் பயன்கொள்ளாது வறியனானவன் இளமைச் செவ்வியின்றி இருக்குமாறுபோலத் தளிர்கள் வாடின கொம்புகளை யுடையவாய்க், கொடுத்தற்கு மனஞ் சிறியனானவனுடைய செல்வம் தன்னைச் 2சேர்ந்தவர்களைப் பாதுகாவாதவாறுபோலத் தன்னைச் சேர்ந்தவர்களுக்கு நிழலின்றாய், யாவரிடத்தும் உலக ஒழுக்கத்தைக் கடந்து தீங்குசெய்து பின்பு புகழில்லையானவனுடைய முடிவுகாலத்து அவன் கிளையேயன்றி அவனுங் கெடுமாறுபோல மரம் சினையேயன்றி வேரோடே நின்றுவெம்பும்படியாக ஞாயிற்றினுடைய பரந்த கதிர்கள் சுடுகையினாலே வருத்தமுற்றுக் குடிமக்கள் கூப்பிடும்படி கொலைத்தொழிலுக்கு அஞ்சா அமைச்சராலே நெறியன்றிப் பொருளை வாங்கிக்கொண்டு செங்கோல்வளைந்த அரசனுடைய குடைநிழலிற் றங்கிய உலகம்போலே உலறின உயர்ந்த 3மரங்களையுடைய வெய்ய காட்டை; எ - று. சினையவாய், நிழலின்றாய், வெம்பவென்க. தெறுகையினாலே உலறிய மரமென்க. இது தரவு. (8). | இடைகொண்டு பொருள்வயி னிறத்திநீ யெனக்கேட்பி னுடைபுநெஞ் சுகவாங்கே யொளியோடற் பாண்மன்னோ (1) படை 4யமை சேக்கையுட் பாயலி னறியாய்நீ (2) புடைபெயர்வா யாயினும் புலம்புகொண் டினைபவள் |
(ஆ) "கொண்மூ, மழைகாலூன்றா வளவயல் விளையா.............கொடுங் கோல் வேந்தன் காக்குநாடே" ஆசிரிய. (இ) "பகையுடன் கிடந்த நிலைபிரி வழக்கினைப், பொருத்தலும் பிரித்தலும் பொருபகைகாட்டலு, முட்பகை யமைத்தலு முணர்த்துசொற் பொருத்தலு, மொரு தொழிற் கிருபகை தீராது வளர்த்தலுஞ், செய்யா வமைச்சுடன் சேரா(?) வரசனாடுகரிந்தன்ன காடு" கல். 3. (ஈ) "மருளேகொண்டு குடிவருந்தமனுநூல் குன்றிவழக்கழியப் பொருளே வெஃகு மரசரைப் போற் புகுவேம் யாமு நரகென்றார்" வில்லி. பதினொராம். போர் 41 (உ) "முற்றுமிருங் குடிகூவப் பொருள்வவ்வி முதுக்குறைவி லுளத்தனாகிக், கற்றவரைத் தண்டித்துக் கல்லாத புல்லருரை கசிந்துகேட்குங், கொற்றவனவ் வுலகுதன தடிப்படுத்திக் கொடுங்கோன்மை புரியுநாளில்"...................... 1. (அ) 'படையமைசேக்கை' அகம். 289: 12. (ஆ) சிலப். 13 : 70. (இ) "கிடையும் பூளையும் கிழியும் பஞ்சியும், படையமைத் தியற்றிய மடையணிப்பள்ளியுள்" பெருங், (1) 43 : 186 -7. 2. (அ) "ஒண்டொடி, யுழையமாகவு மினைவோள், பிழையலண்மாதோ பிரிது நாமெனினே" அகம். 5. (பிரதிபேதம்) 1 கோடியவனீழல், 2 சேர்ந்தவர் தம்மைப், 3 மரங்களுடைய வெய்யகாட்டிடை, 4 அமைச்சேக்கை.
|