(1) யார்கண்ணு மிகந்துசெய் திசைகெட்டா னிறுதிபோல் வேரொடு மரம்வெம்ப விரி (2) கதிர் தெறுதலி னலவுற்றுக் (3) குடிகூவ வாறின்றிப் பொருள் வெஃகிக்
(ஏ) "ஏதிலாராரத் தமர்பசிப்பர் பேதை, பெருஞ்செல்வ முற்றக்கடை" குறள், 524 - 7, 837. (ஐ) "அல்ல லொருவர்க் கடைந்தக்கான் மற்றவர்க்கு, நல்லகிளைகளெனப் படுவார் - நல்ல, வினைமரபின் மற்றதனை நீக்குமதுவே". (ஒ) "சேர்ந்தா ரொருவரைச் சேர்ந்தொழுகப் பட்டவர், தீர்ந்தாராக் கொண்டு தெளியினுந் - தேர்ந்தவர்க்குச், செல்லாமை காணாக்காற் செல்லும்வா யென்னுண்டாம்" (ஓ) " மல்லற் பெருஞ்செல்வ மாண்டவர் பெற்றக்காற,் செல்வுழியு மேமாப்பச் செய்பதாம்" (ஒள) "தமக்குற்றதேயாகத் தாமடைந்தார்க் குற்ற, தெமக்குற்ற தென்றுணராவிட்டக் காலென்னாம்" பழ. 53, 213, 289, 368. (ஃ) "செல்வத்தைப் பெற்றார் சினங்கடிந்து செவ்வியராய்ப், பல்கிளையும் வாடாமற் பாத்துண்டு - நல்லவாந், தான மறவாத தன்மையரே லஃதென்பார், வானகத்து வைப்பதோர் வைப்பு" அறிநெறி. 76. (அஅ)"அடைந்தவர்க் கருளானாகி னறமென்னா மாண்மை யென்னாம்" கம்ப. விபீடண. 110. (ஆஆ)"செல்வற் கழக செழுங்கிளை தாங்குதல்" வெற்றி. (இஇ) "சுற்றநல் கூரவாழுந் தோமுறு சிறியர் போல" நைடதம். மணம்புரி. 35. 1. "தேம்புனலை நீர்க்கடலுஞ் சென்று தரலின்றே" என்பதற்கு, உப்ப நீரையுடைய கடலும் உலகத்தே வந்து இனிய நீரைத்தருதல் ஒரு காலத்து மில்லை; என்றது தீயகுணத்தையுடையோர் பிறர்க்கு இனிமை செய்ய அறியா ரென்றவாறு. எனவே கட்டியங்காரன் எக்காலமும் நமக்குத் தீங்கு செய்வனென்றும் இக்குணத்தால் அவனுக்குக் கேடுவிளையு மென்றும் கூறினான். என்று உரைவிரித்து "யார் கண்ணு.................தெறுதலின்" என்பதை மேற்கோள்காட்டினர். இவ்வுரைகாரர். சீவக. 848. 2. (அ) கோத்தொழி லாளரொடு கொற்றவன் கோடி, வேத்திய லிழந்தவிய னிலம்போல, வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன், றானலந் திருகத் தன்மையிற் குன்றி, முல்லையுங் குறிஞ்சியு முறைமையிற் றிரிந்து, நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப், பாலை யென்பதோர் படிவங் கொள்ளுங், காலை" சிலப். 11: 60 - 67. 3. (அ) "நடுவிகந் தொரீஇ நயனில்லான் வினைவாங்கக், கொடிதோர்த்த மன்னவன் கோல்போல ஞாயிறு, கடுகுபு கதிர்மூட்டிக் காய்சினந் தெறுதலின்.................மலை வெம்பிய போக்கரு வெஞ்சுரம்" கலி. 8.
|