(21). | வினைவெஃகி நீசெலின் விடுமிவ ளுயிரெனப் புனையிழாய் நின்னிலை யான்கூறப் பையென நிலவுவே னெடுந்தகை நீளிடைச் செலவொழிந் தனனாற் செறிகநின் வளையே. |
இது தலைமகனாற் பிரிவுணர்த்தப்பட்ட தோழி, இவ்வகைப்பட்ட சுரத்தைப் பொருள் காரணமாகப் பிரிகின்றீரெனக் கேட்பின் இவ்வகை யாகற்பாலளெனச் சொல்லிச் செலவழங்குவித்தமை, தலைமகட்குச் சொல்லியது, இதன்பொருள். (1) வறியவ னிளமைபோல் வாடிய சினையவாய்ச் (2) சிறியவன் செல்வம்போற் சேர்ந்தார்க்கு நிழலின்றி
1. (அ) " பொருளில்லா னிளமைபோற் புல்லென்றாள்" கலி. 38 : 15. (ஆ) " நலனு மிளமையு நல்குரவின் கீழ்ச்சாம்" நான்மணி. 82 (இ) " பொருளி லொருவற் கிளமையும் போற்று மருளிலொருவற் கறனுந் - தெருளான், றெரிந்தாழ்ந்த நெஞ்சினான் கல்வியு மூன்றும், பரிந்தாலுஞ் செய்யா பயன்" திரிகடுகம். (ஈ) " பொருளுடையான் கண்ணதே போகம்" (உ) " பொருளினா னாகுமாம் போகம்" சிறுபஞ்ச. 3, 35. (ஊ) " பொறையிலா வறிவு போகப் புணர்விலா விளமை.......... போலுஞ், சேயிலாச் செல்வமன்றே" வளையாபதி. (எ) " அழகாக்கலும், பொன்றுஞ் சாகத்தினாய் பொருள் செய்யுமே" (ஏ) " கைப்படு பொருளி லாதான் காமம்போற் காளை மீண்டான்" சீவக. 1922, 2259. (ஐ) " நல்கூர்ந்தா ரின்னலமும், பூத்தலிற் பூவாமை நன்று" நீதிநெறி. 6. (ஒ) " வறியவ னிளமைபோல்" என்பது ஒருமைப் பொருள் கூறிற்றேனும் பன்மைப்பொருள் உணர்த்தலின் மெய்ந்நிலை மயக்கமாயிற்று; மெய் - பொருள் என்பர். நச். தொல். எச். சூ. 53. 2. (அ) "நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பந் துடையார், கொடுத்துத் தான் றுய்ப்பினு மீண்டுங் காலீண்டும்" (ஆ) "செல்வ முடையாருஞ் செல்வரே தற்சேர்ந்தா, ரல்லல் களைபவெனின்" (இ) "அழன்மண்டு போழ்தி னடைந்தவர்கட் கெல்லா, நிழன்மரம்போ னேரொப்பத் தாங்கிப் - பழுமரம்போற், பல்லார் பயன்றுய்ப்பத் தான்வருந்தி வாழ்வதே, நல்லாண் மகற்குக்கடன்" நாலடி. 93, 170, 202. (ஈ) "சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான், பெற்றத்தாற் பெற்ற பயன்" (உ) " கொடுத்தலு மின்சொலு மாற்றினடுக்கிய, சுற்றத்தாற் சுற்றப்படும்" (ஊ) "பெருங்கொடையான் பேணான்வெகுளி யவனின், மருங்குடையார் மாநிலத்தில்" (எ) "காக்கை கரவா கரைந் துண்ணுமார்க்கமு, மன்னநீ ரார்க்கேயுள"
|