62

மற்று வினைமாற்றாய் மறுமையை உணர்த்திற்று. ஆறுமென்ற உம்மை சிறப்பு.

இதனால், செவிலிக்குத் தன்மையென்னும் மெய்ப்பாடு பிறந்தது.

"நூலே கரக முக்கோன் மணையே,
யாயுங் காலை யந்தணர்க் குரிய"
(1) என்பதனாற் கரகமும் முக்கோலுங் கூறினார்.

இது பதினோரடித்தரவும் மூன்றடித் தாழிசையும், அசைநிலையாகிய தனிச்சொல்லுஞ் சிறுமைக்கெல்லை கூறாமையின் ஆசிரியத்திற்குக் கூறிய மூன்றடிச் 1சிறுமை பெற்ற சுரிதகமும் பெற்ற ஒத்தாழிசைக்கலி. (8)

(10). வறியவ னிளமைபோல் வாடிய சினையவாய்ச்
சிறியவன் செல்வம்போற் சேர்ந்தார்க்கு நிழலின்றி
யார்கண்ணு மிகந்துசெய் திசைகெட்டா னிறுதிபோல்
வேரொடு மரம்வெம்ப விரிகதிர் தெறுதலி
5னலவுற்றுக்குடிகூவ வாறின்றிப் பொருள்வெஃகிக்
கொலையஞ்சா வினைவராற் கோல்கோடி யவனிழ
லுலகுபோ லுலறிய வுயர்மர வெஞ்சுரம்;
8இடைகொண்டுபொருள்வயி னிறத்திநீ யெனக்கேட்பி
னுடைபுநெஞ் சுகவாங்கே யொளியோடற் பாண்மன்னோ
படையமை சேக்கையுட் பாயலி னறியாய்நீ
புடைபெயர்வா யாயினும் புலம்புகொண் டினைபவள்;
12 முனிவின்றி முயல்பொருட் கிறத்திநீ யெனக்கேட்பிற்
பனியகண் படலொல்லா படர்கூர்கிற் பாண்மன்னோ
நனிகொண்ட சாயலா ணயந்துநீ நகையாகத்
துனிசெய்து நீடினுந் துறப்பஞ்சிக் கலுழ்பவள்;
16பொருணோக்கிப் பிரிந்துநீ போகுதி யெனக்கேட்பின்
மருணோக்க மடிந்தாங்கே மயல்கூர்கிற் பாண்மன்னோ
விருணோக்க மிடையின்றி யீரத்தி னியன்றநின்
னருணோக்க மழியினு மவலங்கொண் டழிபவள்;
எனவாங்கு;

1. தொல். மரபு சூ.70. இச்சூத்திரத்து ஆயுங்காலை யென்றதனால், குடையும் செருப்பு முதலாயினவும் ஒப்பன அறிந்து கொள்கவென்று கூறி 'எறித்தரு கதிர்தாங்கி யேந்திய குடைநீழ, லுறித்தாழ்ந்த கரகமு முரைசான்ற முக்கோலும்' என்னும் பகுதியை மேற்கோள் காட்டினர். பே.நச்.

(பிரதிபேதம்) 1 சிறுமையும்.