பெருமாவென்றாள் அவர்கள் ஆசிரியனாகிய பெரியோனை. அந்தணர் அவன் மாணாக்கர். அவர்களைப் பெருமா அந்தணீரென விளித்தாள்; பெயர்கள் ஒருவனை ஒருவன் ஆற்றுப்படுத்த செய்யுளின்மையின் (1) முன்னிலை சுட்டிய ஒருமைக்கிளவி பன்மையொடு முடிந்ததல்லாமையுணர்க. காணிரோ? குறுகிநின்றது. கண்டே மென்னாமற் காணேமல்லேங் கண்டனமென்றதனால், அங்ஙனம் போகின்றவரை அறிந்து விலக்கல் அறமன்றென்று 1பெயர்ந்தேமென்றாராகக் கொள்க. போறிரென்றார், (2)தேடி வருவாள் செவிலியென்பது உணர்ந்து. இது தரவு. (12). | (3) பலவறு நறுஞ் (4) சாந்தம் படுப்பவர்க் 2கல்லதை மலையுளே பிறப்பினு மலைக்கவைதா மென்செய்யு நினையுங்கா னும்மக ணுமக்குமாங் கனையளே |
புறம். 60. என்பவைகளும். (இ) "நின்விண்பொரு வியன்குடை, வெயின்மறைக் கொண்டன்றோ வன்றே வருந்திய, குடிமறைப்பதுவே" எனச் சிறப்பித்திருப்பதும் (புறம். 35.) பிறவும் ஈண்டு அறிதற்பாலன, 1. முன்னிலை சுட்டிய வொருமைக் கிளவி ஆற்றுப்படையல்லாத வழியும் பலரில் வழியும் பன்மையொடு போற்றாமற் கூறப்படும் என்பதற்கு 'குறிப்பேவல்......காணீரோ பெரும' என்பது (தொல். எச்ச. சூ. 63. 'முன்னிலை') தெய்வச்சிலையார் காட்டிய மேற்கோள். 2. "செவிலிபின் றேடிச் சேறலென் றாங்கு" நாற்கவி. சூ. 183. 3. "பலவுறு முத்து" என்பதற்கு, 'பலவிலையுற்ற முத்தென்றுமாம்' என, (பொருந. 28.) உரை. எழுதியிருத்தல் ஈண்டு அறியத் தக்கது. 4. (அ) "கடவரை காதலனோடு கடந்த கயனெடுங்கட், கடவர வல்குனும் பாவைக் கிரங்கன்மின்...மலய மென்னுந், தடவரைதானே யனிந்தறியாதுதண் சந்தனமே." இறை. சூ. 23. மேற்கோள். (ஆ) "சுரும்பிவர் சந்துந் தொடுகடன் முத்தும்வெண் சங்குமெங்கும், விரும்பினர் பாற்சென்று மெய்க்கணி யாம்..........கரும்பனமென் மொழி யாருமந் நீர்மையர் காணுநர்க்கே." திருச்சிற். 248. (இ) "தரளம், வவ்வினரிடத்து மவ்வழியான, ...................பொதியப் பொருப்பு நெடுமுதுகு வருந்திப், பெற்று வளர்த்த கற்புடை யார, மணியுமா மகிழ்நர் பதியுறை புகுந்தால்......சென்றாட் குடைந்து, பொன்பதி நீங்கியுண்பது மடங்கி, முழங்கப் பெருங்குரல் கூஉய்ப், பழங்க ணெய்தியது பேதைமை யறிவே" கல். 21 (ஈ) "பலவுறு.........நினையுங்கா னும்மக ணுமக்குமாங்கனையளே" என்பது சுரத்திடைக் கண்டோர் செவிலியர்க்கு அறநூற்குத்தக உலகியல் புரைத்தற்கு மேற்கோள். தொல். செய். சூ. 195. பே. நச். (பிரதிபேதம்) 1 பேர்ந்தேமாக, 2 அல்லது. (தாழிசை மூன்றினும்)
|