58

வெவ்விடைச் செலன்மாலை யொழுக்கத்தீ ரிவ்விடை
யென்மக ளொருத்தியும் பிறண்மக னொருவனுந்
தம்முளே புணர்ந்த 1தாமறி புணர்ச்சிய
ரன்னா ரிருவரைக் காணிரோ பெரும
(9). (1) காணே மல்லேங் கண்டனங் கடத்திடை
யாணெழி லண்ணலோ டருஞ்சுர முன்னிய
மாணிழை மடவர 2றாயிர்நீர் போறிர்

எ - து: பெருமா! அந்தணீர்! உறியிலே தங்கின கமண்டலத்தையும் அரி அயன் அரனென்னும் மூவரும் ஒருவரென்று சொல்லுதல் தன்னிடத்தே அமைந்த (2) முக்கோலையும் முறைமைபடத் தோளிலே வைத்து எறித்தலைச் செய்கின்ற (3) ஞாயிற்றின் கதிர்களைத் தாங்குகையினாலே எடுக்கப்பட்ட குடைநிழலிலே, வெவ்விய காட்டிடத்தே போதலை இயல்பாகவுடைய ஒழுக்கத்தினை யுடையீராதலான் உம்மை வினவுகின்றேன்; இக்காட்டிடத்து என்னுடைய மகளொருத்தியும் வேறொருத்தி மகனொருவனும் பிறரறியா மற் றங்களிலே கூடின தாங்கள் இப்பொழுது பிறர் அறிந்த கூட்டத்தினை யுடையராயினார்; அத்தன்மையார் இருவரைக் காணாதிருந்தீரோ? இக்காட்டிடைக் காணா திருந்தேமல்லேம்; கண்டு அஃதறமென்றே கருதிப் பேர்ந்தேம், ஆண்மக்கட்குக் கூறும் அழகினையுடைய தலைவனோடே இவ்வரிய சுரத்தைப் போகக்கருதிப் போந்த மாட்சிமைப்பட்ட அணியினையுடைய மடப்பத்தை யுடையாளுக்குத் தாயாந்தன்மையை உடையீர் 3போல இருந்தீர்; எ - று.

அரியயனரனென்னும் மூவரையும் ஒருவனாகவல்லது 4வெவ்வேறாக நினையாத நெஞ்சத்தாலே ஐம்பொறியும் நுமக்கு ஏவல் செய்தலை இயல்பாகவுடைய கோட்பாட்டையும் 5நுமக்குரிய ஒழுக்கத்தையுமுடைய அந்தணீ ரென்க. குறிப்பு, ஆகுபெயர்.


1. 'அறியே மல்லே மறிந்தன மாதோ' ஐங். 240.

2. (அ) நியாயப்பிரகாசம். முதற் பரிச்சேதம் 86-87. எண்களின் தலைப்பில் ஏகதண்டி வேதாந்திகளென்றும் திரிதண்டி வேதாந்திக ளென்றும் இருவகையார் கூறப்படுகின்றனர்.
(ஆ) பேராசிரியர், ஒரு கோலுடையார் இருவருளர்; அவர் துறவறத்து நின்றாராதலின் உலகியலின் ஆராயப் படாரென்றும், முக்கோலுடையா ரிருவருட் பிச்சை கொள்வானும் பிறாண்டிருந்து தனதுண்பானும் உலகியலின் நீங்காமையின் அவரே கூறப்படுவரென்றும் விளக்குவர்; தொல். மர. சூ. 70.

3. (அ) "அலர்கதிர் ஞாயிற்றைக் கைக்குடையுங் காக்கும்" அற. 43 (ஆ) "வெயின்மறைக் கொண்ட வுருகெழு சிறப்பின் மாலை வெண்குடை"

(பிரதிபேதம்) 1 தாமார், 2 தாயினீர், 3 போலே, 4 வேறாக, 5 உமக்கு.