எ - து; நறியனபலவுங்கூடும் நறிய 1சந்தனம் தங்கண் மெய்ப்படுப் பார்க்குப்பயன்கொடுப்பதல்லது மலையிடத்தேபிறந்தனவாயினும் அச்சந்தனங்கடாம் அம்மலைக்கு என்னபயனைக் கொடுக்கும்? ஆராயுங்காலத்து நும்முடைய 2மகளும் பயன்படும் பருவத்து 3நுமக்குப் பயன்படாள்; எ - று.
(15). | (1) சீர்கெழு வெண் (2) முத்த மணிபவர்க் கல்லதை நீருளே பிறப்பினு நீர்க்கவைதா மென்செய்யுந் தேருங்கா னும்மக ணுமக்குமாங் கனையளே |
எ - து; தலைமை பொருந்திய வெள்ளிய முத்துக்கள் அணிவார்க்குப் பயன்படுவதல்லது (3) கடலிடத்தே பிறந்தனவாயினும் அம்முத்தங்கடாம் அக்கடலுக்கு என்ன பயனைக் கொடுக்கும்? ஆராயுங்காலத்து நும்முடைய மகளும் பயன்படும் பருவத்து நுமக்குப் பயன்படாள்; எ - று.
1. (அ) "சீர்கெழு............கனையளே' என்பது, கொண்டுதலைக் கழிந்துழி இடைச்சுரத்துக் கண்டோர் செவிலியைத் தடுத்ததற்கும் (தொல். அகத். சூ. 40. நச்.) (ஆ) பார்ப்பான் கூற்றுக்கும் (தொல். செய். சூ. 189. பே. நச்.) (இ) மிக்கோர் ஏதுக் காட்டற்கும். (நாற்கவி. சூ. 188.) மேற்கோள். 2. (அ) "மடவரன் மாதர்க்கு வருந்தா தீமோ, கடல்வயிறு பயந்த நித்தில, முடையோர்க் காத லுலகியல் வழக்கே"........... (ஆ) "வெந்நீரருஞ்சுரங் காளைபின் சென்றநும் மெல்லியன்மாட், டிந்நீர்மை யீரிரங் கன்மின்............றண்குமரி, முந்நீர் பயந்தா லணிவார் பிறரென்ப முத்தங்களே" (இ) "பெருங்கடன் ஞாலத்துட்பெண்பிறந் தார்தம்பெற் றார்க்குதவா, ரிருங்கடல் போற்றுய ரெய் தன்மி னீன்றன வென்று முந்நீர்க், கருங்கடல் வெணசங் கணிந்தறியாதண் கதிர் முத்தமே" இறை. சூ. 23. மேற்கோள். (ஈ) "வலம்புரி யீன்ற முத்த மண்மிசை யவர்கட் கல்லால், வலம்புரி பயத்தை யெய்தா தனையரே மகளிர்" சீவக. 563 (உ) "இற்றுங்கேண்மதி முற்றிழை மகளிர், தத்துநீர்ப் பெருங்கடற் சங்குபொறை யுயிர்த்த, நித்திலத்தன்னர் நினைந்தனை காணெண" பெருங். (1) 47: 253 - 5. (ஊ) "நாகைமின்னே, மீனார் விழியை யென்னாடி நைவாய்விரி வாரிமுத்தந்,................தானாகப் பூண்பவர்...................தாங்கொள்வரே" குலோத்துங்க சோழன் கோவை. 392. (எ) "வேலைத் தரளமும்....................போல நம்மைத் துறந்து மெல்ல, மாலைக் குழலிதனக்குரி யானை மணந்து சென்றாள்" வெங்கைக். 333. (ஏ) "மடவா ளொருவ னுடனகன் றாளென்று வாடுகின்றாய்,...................சங்கத் திடையே விளங்கிய முத்தமிழை, யுடனே புனைந்து மறிவிலை யோமொழி யொண்ணுதலே" திருவாரூர்க். 392. (ஐ) "நையன் மின்னே, தனையீன் றவளை விடுத்தணி வாரிடஞ் சார்ந்திடுமுத், துனையீன் றவளில்லி னீயுமுற் றாயில்லை யுன்மகளு, மனையா ளொருவன்பின் சென்றா ளுலகியல் பாமிதுவே" கோடீச்சுரக். 352. 3. “பெருங்கடலுட் பல்விலைய முத்தம்பிறக்கும்" நான்மணி. 6. (பிரதிபேதம்) 1 சந்தனமாங்கண்மெய், 2 மகள், 3 நுமக்கும்.
|