எனவாங்கு எ - து: என்று யான்சொல்லாநிற்க; எ - று. ஆங்கு, அசை. இது தனிச்சொல். (19). | | நச்சல்கூடாது பெரும விச்செல வொழிதல் வேண்டுவல்சூழிற் பழியின்று | | (1) | மன்னவன்புறந்தர வருவிருந் தோம்பித் 1தன்னகர்விழையக் கூடி னின்னுறல் வியன்மார்ப வதுமனும் பொருளே |
எ - து : பெருமா! பொருளை நச்சுதல் நினக்குப் 2பொருந்தாதால்; ஆராயிற் பழியின்றாக இச்செலவை நீ தவிர்தலை யான்விரும்புவேன்; அரசன் காக்க வருகின்ற விருந்தினரைப் பாதுகாத்துத் தன்மனைவி விரும்பும்படி அவளுடன் கூடியிருக்கில் இனிய முயக்கத்தை யுடைத்தாகிய அகற்சியை யுடைய மார்பனே நிலைபெறும் பொருள் அதுகாண்; எ - று. நகர், ஆகுபெயர். இதனால், தலைவற்குக் கருதுதல்பிறந்தது; தோழிக்குச் சூழச்சிப்பிறந்தது. இது ‘பழியின்று’ எனத் (2) தாழிசைப் பொருள்களைக்கொண்டு பின்பு ‘மன்னவன் புறந்தர வருவிருந்து................................. பொருளே’ எனப் போக்கியற் பொருளையுங் கொண்டு இற்ற சுரிதகமும் ஏனை உறுப்புக்களும் பெற்ற ஒத்தாழிசைக்கலி. " தரவிய லொத்தும்" என்னுஞ் சூத்திரத்துப் புரைதீர் என்பதனாற் போக்கியற் பொருளுங் கொண்டு 3புரைபடாது வந்தது. (7)
(ஊ) "அற்பக னுகருமீ னவரை நுங்குமான், முற்பக லோர்பழி முடிக்கின் மற்றது, பிற்பக றமக்குறும் பெற்றியென்னவே" கந்த. இரண்டாநாட் 395. 1. "வாழி யாதன் வாழி யவினி, நெற்பல பொலிக" என்னு மூலமும், ‘காவற் பொருட்டு அரசன் வாழ்க; விருந்தாற்றுதற்பொருட்டு நெற் பல பொலிக’ என்னும் பழையவுரை விளக்கமும் (ஐங். 1.) இங்கே ஒப்பு நோக்கத் தக்கன. 2. (அ) சுரிதகம் தாழிசையின் பொருண் முடிபைத் தன்பாற் பெற்று நிற்றற்கு (நச்சுபவோ என்பன தாழிசைகளிலுள்ளன) ‘நச்சல் கூடாது பெரும விச்செல, வொழிதல் வேண்டுவல்' என்பதையும் போக்கியற் பொருள் வந்தால் அவ்விரண்டையும் புரைபடாமற் பொருந்தச் செய்வரென்பதற்கு 'தன்னகர் விழையக் கூடின்' என்பதையும் (தொல். செய். சூ. 137.) மேற்கொள் காட்டுவர், பேராசிரியர். (ஆ) "புரைதீ ரென்றதனால், தாழிசைப் பொருளேயன்றி அவற்றோடு போக்கியற் பொருளுங்கொண்டு புை[ட](ர)படாது வருவனவுங் கொள்க. அது 'அரசினு நிலையில்லாப் பொருளையு நச்சுபவோ' என முடித்தலின் 'நச்சல்கூடாது பெரும விச்செல, வொழிதல் வேண்டுவல் (பிரதிபேதம்) 1 நன்னகர், 2 பொருந்தாது, 3 புடைபடாது.
|