56

(9).(1). எறித்தருகதிர்தாங்கி யேந்தய குடைநீழ
லுறித்தாழ்ந்தகரகமு முரைசான்ற முக்கோலு
நெறிப்படச் சுவலசைஇவேறோரா நெஞ்சத்துக்
குறிப்பேவல் செயன்மாலைக்கொளைநடை யந்தணீர்
5.  வெவ்விடைச்செலன்மாலை யொழுக்கத்தீ ரிவ்விடை
யென்மகளொருத்தியும் பிறண்மக னொருவனுந்
தம்முளே புணர்ந்த தாமறி புணர்ச்சிய
ரன்னா ரிருவரைக் காணிரோ பெரும
9. காணேமல்லேங் கண்டனங் கடத்திடை
யாணெழி லண்ணலோ டருஞ்சுர முன்னிய
மாணிழை மடவர றாயிர்நீர் போறிர்;
12.  பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை
மலையுளே பிறப்பினு மலைக்கவைதா மென்செய்யு
நினையுங்கா னும்மக ணுமக்குமாங் கனையளே;
15. சீர்கெழுவெண்முத்த மணிபவர்க் கல்லதை
நீருளே பிறப்பினு நீர்க்கவைதா மென்செய்யுந்
தேருங்கா னும்மக ணுமக்குமாங் கனையளே;
18. ஏழ்புண ரின்னிசை முரல்பவர்க் கல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்கவைதா மென்செய்யுஞ்
சூழுங்கா னும்மக ணுமக்குமாங் கனையளே;
எனவாங்கு
22. 

இறந்தகற்பினாட் கெவ்வம் படரன்மின்
சிறந்தானைவழிபடீஇச் சென்றன
ளறந்தலை பிரியா வாறுமற் றதுவே.

இஃது உடன்போய தலைவிபின் சென்ற செவிலி இடைச்சுரத்து முக்கோற்பகவரைக்கண்டு இவ்வகைப்பட்டாரை ஆண்டுக்காணீரோவென வினவியாட்கு, அவரைக் கண்டு அஃதறமெனவே கருதிப் 1பேர்ந்தேம், நீரும் அவர் திறத்து 2 எவ்வம்பட வேண்டாவென 3எடுத்துக்காட்டி அவர் தெருட்டியது,


சூழிற் பழியின்று' எனத்தாழிசைப் பொருளைக்கொண்டு பின்பு 'மன்னவன் புறந்தர வருவிருந் தோம்பி, நன்னகர் விழையக் கூடி, னின்னுறல் வியன்மார்ப வதுமனும் பொருளே' எனப் போக்கியற் பொருளையும் கொண்டிற்றது" என்பர், நச்; தொல், செய். சூ, 137)

1. 'எறித்தரு...மற்றதுவே' என்பது, செவிலிவரவின்கட் கூறியதற்கும். தொல். அகத். சூ. 40. நச். இடைச் சுரத்துப் புலம்புஞ் செவிலியை எதிர் வருவார் கண்டு தெருட்டியதற்கும் இறை. சூ. 23; மேற்கோள்.