54

(15). புரைதவப் பயனோக்கார் தம்மாக்க முயல்வாரை
வரைவின்றிச் (1) செறும் 1பொழுதிற் கண்ணோடா துயிர்வௌவு
2மரைசினுந் நிலையில்லாப் பொருளையு நச்சுபவோ

எ - து : தமக்கு உயர்ச்சி மிகும்படியாகத் (2) தாம் பெறும் பயனைப் பாராதே அரசராக்கத்தை 3முயன்றுபோதும் அமைச்சரைக் கோபிக்கும் பொழுது நங்காரியத்தினை முயன்றவரென்று ஒருவரைவின்றிப் (3) பழமையையும் பாராதே பொருண்முதலியனவன்றி உயிரைக்கொள்ளும் அரைசினுங் காட்டில் நிலைபேறில்லாத பொருளையும் அறிவுடையோர்கள் நச்சுவார்களோ? நச்சார்காண்; எ - று.

(4) 4அத்தன்மையானுயிரை வௌவிய அரசனும் அன்றே கெடுவனென்றார்.

இவை மூன்றும், தாழிசை.


1. (அ) "உரைசெல வுயர்ந்தோங்கிச் சேர்ந்தாரை யொருநிலையே, வரை நில்லா விழுமமுறீஇ நடுக்குரைத்துத் தெறன்மாலை, யரைசு"கலி. 146 : 1-3. (ஆ) "பொறிசெறித்த மாண்பினராய்ப் பொருந்தலர்ச் செற்றிருநிதியஞ்,
செறிதருமா றீட்டியரு வினைவாங்கு செயலி னரு, முறுபிழையுட் சிறிதியற்றி னொறுத்திடுவர் வயவேந்தர்" நைடதம். அன்னத்தைத் தூது. 106. (இ) "தொழுந் தகை யமைச்சரைச் சுளிந்து நோக்குறா, மொழிந்தன னிடியொடு முகிலுஞ் சிந்தவே" கம்ப. அதிகாயன். 1.

2. (அ) "பால்வரு முறுதி யாவுந் தலைவர்க்குப் பயக்கு நீரார்" கம்ப. அயோத்தி. மந்திர. 8. (ஆ) "இன்னுயி ரழியும் போழ்து மிறைவனுக் குறுதியல்லான், முன்னிய முகமன்மாட்டா முற்றிய வறிவினாரை" சூளா. துறவு. 21. (இ) "ஆளு மரசன் பாலன்பு மவனுக் காவதறியறிவு, நாளு மவற்றைக் கலங்காம னன்று முடிக்கு முளத்துணிவு,
மூளும் வினைக்குத் தன்கரத்தின் மொய்த்த பொருளின் விழையாத, கோளுமுடையான் புரிவினையிற் குற்றமுறாது குணமேயாம்" "முறைவழிப் பிறழ்தல் செல்லா முதுக்குறை யமைச்சர் தம்மைச், சிறையிடைப் படுத்து" விநாயக, அரசியற்கை 81; வன்னி. 16.

3. "பழமை கடைப்பிடியார் கேண்மையும் பாரார், கிழமை பிறிதொன்றுங் கொள்ளார் வெகுளின்மன், காதன்மை யுண்டே யிறைமாண் டார்க் கேதிலரு, மார்வலரு மில்லை யவர்க்கு" நீதிநெறி. 47

4. (அ) "தீயவை செய்தார் கெடுத னிழறன்னை, வீயா தடியுறைந்தற்று" (ஆ) "பிறர்க்கின்னா முற்பகற் செய்யிற் றமக்கின்னா, பிற்பகற் றாமே வரும்" குறள். 208 : 319. (இ) "முற்பகற் செய்யிற் பிற்பகல் விளையும்" கொன்றை. (ஈ) "முற்பகற் செய்தான் பிறன்கேடு தன்கேடு, பிற்பகற் காண்குறூஉம் பெற்றியகாண்" சில. 21: 3 - 4. (உ) "முற்பகல் செய்வினை பிற்பக லுறுநரின்" பெருங். (1) 56: 259.

(பிரதிபேதம்) 1 பொழுது, 2 அரசினும், 3 முயன்றும், 4 அத்தன்மையான அரசனும் உயிரை வௌவிய அன்றே.