(8). | (1) நடுவிகந் தொரீஇ (2) நயனில்லான் வினைவாங்கக் கொடிதோர்த்த மன்னவன் கோல்போல ஞாயிறு கடுகுபு கதிர்மூட்டிக் காய்சினந் தெறுதலி னுறலூறு (3) கமழ் 1கடாஅத் தொல்கிய வெழில்வேழம் வறனுழு (4) நாஞ்சில்போன் மருப்பூன்றி நிலஞ்சேர | | (5) விறன்மலை வெம்பிய போக்கரு வெஞ்சுரஞ் சொல்லா திறப்பத் துணிந்தனிர்க் கொருபொருள் சொல்லுவ துடையேன் (6) கேண்மின்மற் றைஇய |
எ - து: நடுவுநிலையைக் கைவிட்டு நீங்கி அருளில்லாத அமைச்சன் தன் 2மனத்திற்கிடந்த காரியத்தை மனத்தினின்றுந் தோற்றுவிக்க, அது கேட்டுக் கொடுந்தொழிலைச் சூழ்ந்த அரசனது கொடுங்கோல் சுடுமாறுபோலப் பகலோன் கடுகிக் காய்கின்ற கிரணங்களைச் செலுத்திச் (7) சினத்தாற்சுடுகையி
1. (அ) "அலவுற்றுக் குடிகூவ வாறின்றிப் பொருள் வெஃகிக், கொலை யஞ்சா வினைவராற் கோல்கோடி யவனிழ, லுலகுபோ லுலறிய வுயர்மர வெஞ்சுரம்" கலி. 10: 5-7, (ஆ) "செம்மையி னிகந் தொரீஇ" கலி. 14. (இ) "அறனிலை திரியா வன்பி னவையத்துத், திறனி லொருவனை நாட்டி முறைதிரிந்து, மெலிகோல் செய்தே னாகுக" புறம். 71 (ஈ) "முறைதெரிந்து செல்வர்க்கு நல்கூர்ந் தவர்க்கு, மிறைதிரியா னேரொக்கல் வேண்டும்." பழமொழி. 206. (உ) "உடைப்பெருஞ் செல்வத் துயர்ந்த பெருமை, யடக்கமி லுள்ளத்தனாகி - நடக்கையி, னொள்ளிய னல்லான்மேல் வைத்தல் குரங்கின் கைக், கொள்ளி கொடுத்து விடல்." பழமொழி. 200. 2. (அ) "பேதையோன் வினை வாங்க" கலி. 27 (ஆ) "வினைவாங்கி" திருவிளை. பன்றிக்குட்டிகளை. 13. 3. யானை மதம் கமழுமென்பதனை. கலி. 21 : 2; ‘கமழ் கடாஅத்து’ என்பதன் குறிப்பாலுணர்க. 4. (அ) "பிடிவா யன்ன மடிவாய் நாஞ்சில்" பெரும்பாண். 199. (ஆ) "யானைத், தூம்புடைத் தடக்கை வாயொடு துமிந்து, நாஞ்சி லொப்ப நிலமிசைப் புரள" புறம். 19 (இ) " வெள்ளி வெண்ணாஞ் சிலான் ஞால முழுவனபோ, லெல்லாக் களிறு நிலஞ் சேர்ந்த" களவழி. 40. (ஈ) "அலப்படை யனைய தூங்குவாய் நெடுங்கை யலைசெவி வாரணம்" விநாயக. திருநகர. 21. 5. விறன்மலை: கலி. 20, 44, 45, 53. திணைமொழி. 2, 7. 6. ‘ஐய’ என்பது பன்மைவினை பெற்றுவருதலை 16-ம் பக்கம் 3-வது குறிப்பிற் காண்க. 7. சினமென்பதற்கு வெம்மையென்று பொருள்விளக்குவர் புறநானூற்றுரை காரர். (பிரதிபேதம்) 1 கடாத்து, 2 மனதிற்.
|