"தரவும் போக்கும் பாட்டிடை மிடைந்து, மைஞ்சீ ரடுக்கியு மாறுமெய் பெற்றும், வெண்பா வியலான் வெளிப்படத் தோன்றும்" (1) 1என்பதனாற் கூனாகி, நீயே இவட்கே என்னுஞ் சொற்கள் இடைநிலைப்பாட்டோடு கூடி ஐஞ்சீரடுக்கிவந்த கலிவெண்பாட்டாயினும் அத்தரவு வெண்பாவாய் ஒழிந்தன வெண்பா அன்மையிற் கொச்சகமாயிற்று. (6) (8). | நடுவிகந் தொரீஇ நயனில்லான் வினைவாங்கக் கொடிதோர்த்த மன்னவன் கோல்போல ஞாயிறு கடுகுபு கதிர்மூட்டிக் காய்சினந் தெறுதலி னுறலூறுகமழ்கடாஅத் தொல்கிய வெழில்வேழம் | 5 | வறனுழுநாஞ்சில்போன் மருப்பூன்றி நிலஞ்சேர விறன்மலைவெம்பிய போக்கரு வெஞ்சுரஞ் சொல்லா திறப்பத் துணிந்தனிர்க் கொருபொருள் சொல்லுவ துடையேன் கேண்மின்மற் றைஇய; | 9 | வீழுநர்க்கிறைச்சியாய் விரல்கவர் பிசைக்குங்கோ லேழுநதம்பயன்கெட விடைநின்ற நரம்பறூஉம் யாழினுந்நிலையில்லாப் பொருளையு நச்சுபவோ; | 12 | மரீஇத்தாங்கொண்டாரைக் கொண்டக்காற் போலாது பிரியுங்காற் பிறரெள்ளப் பீடின்றிப் புறமாறுந் திருவினுந் நிலையில்லாப் பொருளையு நச்சுபவோ; | 15 | புரைதவப் பயனோக்கார் தம்மாக்க முயல்வாரை வரைவின்றிச் செறும்பொழுதிற் கண்ணோடா துயிர்வௌவு மரைசினுந் நிலையில்லாப் பொருளையு நச்சுபவோ; எனவாங்கு; | 19 | நச்சல்கூடாது பெரும விச்செல வொழிதல் வேண்டுவல் சூழிற் பழியின்று மன்னவன் புறந்தர வருவிருந் தோம்பித் தன்னகர் விழையக் கூடி னின்னுறல் வியன்மார்ப வதுமனும் பொருளே. |
இது சொல்லாது பிரியலுற்ற தலைவன் குறிப்பறிந்து தோழி பொருளது நிலையாமை கூறி 2 அவளோடுகூடிச் செல்கின்ற இல்வாழ்க்கைச் செலவே பொருளென அவன் செலவழுங்கக் கூறியது. இதன் பொருள்.
1. தொல். செய் சூ. 155. (பிரதிபேதம்) 1 என்பதனானாகி, 2 இவளொடு.
|