னாலே (1) முன்பு வண்டுகளுறுதலையுடைத்தாய் ஊறுகின்ற கமழும் மதத்தினை யுடைத்தாய் இப்பொழுது கெட்ட அழகையுடைய 1யானை ஈரமற்ற நிலத்தை உழுகின்ற கலப்பைகள்போலக் கொம்புகளை ஊன்றிக் கையை நிமிர்த்து நிலத்தே கிடவாநிற்க வெற்றியை யுடைய மலைகள் வெம்புதலைச் செய்த போதற்றொழில் அரிய வெய்யகாட்டை, எங்களுக்குச் சொல்லாதே போகத்துணிந்த நுமக்கு ஒரு காரியத்தினைக் கூறுந் தன்மையையுடையேன். அதனைக்கேட்பீராக; எ - று. இதனால், தோழிக்குச் சூழ்ச்சி பிறந்தது. வாங்க என்றது "விருத்திவாங்க" என்றது போல் நின்றது; உறல் (2) வாயிடத்தே வந்து உறுதலுமாம். பொருள், ஆகுபெயர்; மற்று அசை. இது தரவு. (9). | வீழுநர்க் கிறைச்சியாய் (3) விரல்கவர் பிசைக்குங்கோ லேழுந்தம் பயன்கெட விடைநின்ற நரம்பறூஉம் யாழினுந் 2நிலையில்லாப் பொருளையு நச்சுபவோ |
எ - து: ஐயனே, விரும்புவார்க்கு நேயமாய் விரலாலே வாசிக்கப்பட்டு ஒலிக்கும் நரம்பு ஏழும் தம்முடைய பயன் இன்றாம்படி (4) தானக்கோலின் அகப்பட்டு இடைநின்ற (5) நரம்பு அற்றுப்போம் யாழினுங் காட்டில் நிலைபேறில்லாத பொருளையும் அறிவுடையோர்கள் நச்சுவர்களோ? நச்சார் காண்; எ - று.
1. ‘வென்றிக்களிறு’ (சீவக. 14.) என்பதன் உரைநோக்குக. 2. (அ) "வரி ஞிமி றார்க்கும் வாய்புகு கடாஅத்துப், பொறிநுதற் பொலிந்த வயக்களிற்றொருத்தல்" அகம். 78. (ஆ) "வரிஞிமிறார்க்கும் வாய்புகு கடாஅத், தண்ணல் யானை" புறம். 93. (இ) "வரி வண் டார்க்கும் வாய்புகு கடாஅத்த, வண்ணல் யானை" தொல். மேற். 3. "விரல் கவர்ந்துழந்த கவர்வி னல்யாழ்" நற். 335: "விரல் கவர் பேரியாழ்" பதிற். 57 : 8 கவர்தல் - அகப்படுத்தல்; பதிற். 84. உரை. 4. (அ) தானக்கோல், "தன்மக ளொருத்தியைத் தான யாழ் கற்கென" பெருங்.(1) 35 : 5. (ஆ) " திருந்தொளிப்பசுந் தொடிக்கரங் கோல்பொரச் சிவப்ப" பாகவதம், (10) மதுரைகண்ட. 15. 5. "தக்க நரம்பிலா நாத யாழும்...................போன்ற வீடுமனிலாத சேனை" வில்லி. பதினொராம். 5. (பிரதிபேதம்) 1 யானைகள். 2 நிலையிலா (தாழிசைமூன்றிலும்).
|