49

(13). நீயே, 1புலம்பி லுள்ளமொடு பொருள்வயிற் 2 செலீஇய
வலம்படு திகிரி வாய்நீ வுதியே

எ - து : நீ பிரிகின்றேமென்கின்ற தனிமையில்லாத நெஞ்சத்தோடே பொருளைத் தேடற்குப்போக வெற்றியுண்டாகின்ற சக்கரத்தினது வாயைத் துகள்போகத் துடையாநின்றாய்; எ - று.

இவட்கே, அலங்கிதழ்க் (1) கோடல் வீயுகு பவைபோ
லிலங்கே ரெல்வளை யிறையூ ரும்மே

எ - து: இக்காலத்து இவளுக்கு அசைகின்ற இதழினையுடைய கோடற்பூ ஊழ்த்து விழுகின்றவைபோல விளங்கும் அழகினையுடைய ஒளிபொருந்தின வளை இறையினின்றுங் கழலாநிற்கும்; எ - று.

இவை மூன்றும், தாழிசை.

(17).எனநின்,
சென்னவை யரவத்து மினையவ ணீநீப்பிற்
றன்னலங் கடைகொளப் படுதலின் மற்றிவ
(2) ளின்னுயிர் தருதலு மாற்றுமோ
முன்னிய தேஎத்து முயன்றுசெய் பொருளே

எ - து: நீ செல்கின்றது எமக்குக் குற்றத்தைச் 3செய்யு நின்னுடைய ஆரவாரத்தும் இத்தன்மையளானவள், தன்னுடைய நலம் நீ நீங்குவையாயின் இறந்து படுங் காலத்தாலே கைக்கொள்ளப்படுகையினாலே நின்னை ஒன்று வினவுகின்றேன்; நீ கருதின தேயத்துச்சென்று முயன்று தேடும் பொருள் இன்பந்தருதலேயன்றி இவள் இனிய 4உயிரையும் தருதலைச் செய்யுமோ? எ - று.

என அசை.

இதனால், தலைவற்கு அசைவு பிறந்தது.
எனநின், தனிச்சொல்; எஞ்சியது சுரிதகம்.


1. கோடல் - வெண்காந்தள்; இது வளைக்கு உவமையாதல் (அ) "ஊழுறு கோடல்போ லெல்வளை யுகுபவால்"
(ஆ) "ஊழுற்ற கோடல்வீ யிதழ்சோருங் குலைபோல விறைநீவு, வளையாட்கு" கலி.: 48, 121. இதற்கு வளை உவமையாதல்: (இ) "வளையுடைந் தன்ன வள்ளிதழ்க் காந்தள்" மலை. 519. (ஈ) "உடைவளைகடுப்ப மலர்ந்தகாந்தள்" புறம். 90.

2. (அ) ஓது வதற்கண்ண லேபிரிந் தாலொண் மயிலையென்பு, மாது படுத்தினர் போலோதி வாரும்..................தீது படக்கொடி யாவிசென்றாலுந் திருப்புகைக்கே" (ஆ) "சிறந்திடு கல்விகள் வேண்டுவ யாவையுந் தேர்ந்துபின்ன, ரிறந்தமின் னாரென்பை யன்னார்க ளாக வியற்றுதற்கோர், திறந்தரு விஞ்சையுங் கற்றறி காணவுன் செல்வியையே" என ஓதற்பிரிவின்கண் இக்கருத்து அமைக்கப் பெற்றிருத்தல் காண்க.

(பிரதிபேதம்) 1 புலம்பியலுள்ள, 2 செலீஇயர், 3 செய்ய, 4 உயிரைத்தருதலையும்.